எதிரணியில் எந்த ப்ளேயரை எடுப்பீங்க..? வித்தியாசமான பதில் சொல்லி அசர வைத்த இயர் மோர்கன்..!!

லண்டன்:உங்கள் உலக கோப்பை அணியில் மற்ற வீரர் ஒருவரை எடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு அனைத்து அணிகளின் கேப்டன்களும் சொன்ன பதில் சூப்பர் ரகம். அவர்களின் பதில்கள் இணையத்தில் வைரலாகின்றன.

12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி உட்பட 10 அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து சென்று விட்டன. அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அணிகள், ஒன்றாக செய்தியாளர்களுடன் கலந்து உரையாடினர்.

இந்த சந்திப்பில் ஒரு வித்தியாசமான கேள்வி அனைத்து வீரர்களிடம் கேட்கப் பட்டது. அந்த கேள்வி இது தான்... மற்ற அணியில் ஒரு வீரரை உங்களது அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்று...?

இப்படி ஆகிப் போச்சே.. இந்தியா - நியூசி. போட்டியில் காயம் காரணமாக இளம் வீரர் நீக்கம்!

அதற்கு ஒவ்வொரு அணி வீரர்களும் அளித்த பதில்கள் சூப்பர் ரகம். அவற்றை தற்போது பார்க்கலாம்

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய காப்டன் அரோன் ஃபின்ச், தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சாளர் ரபாடா என்றார்.

இலங்கைக் கேப்டன் டிமுத் கருணாக ரத்னே இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்கான் இங்கிலாந்தின் பட்லர் வேண்டும் என்றார்.

மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், எங்கள் அணியே சிறப்பாக இருப்பதால், அதனால் மற்ற அணி வீரர்கள் தேவையில்லை என்றார்.

ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின், அன்றைய தினத்தை பொறுத்து முடிவு செய்வேன் என்று வித்தியாசமாக பதில் கூறினார்.

தென்னாப்பிரிக்கா கேப்டன் டுபௌசிஸ், பவுலர்கள் என்றால் ரஷித் கான் அல்லது பும்ரா, பேட்ஸ்மென் என்றால் கோலி வேண்டும் என்றார்.

வங்கதேஷ் கேப்டன் மோர்ட்டாசாவும் கோலியைதான் கைக்காட்டினார்.

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளஸிஸ் வேண்டும் என்றார்.

ஆனால்...... அவர்களை எல்லாம் தாண்டி இங்கிலாந்தின் இயன் மோர்கன், சொன்ன பதில் டாப்கிளாஸ். எனக்கு எந்த வீரரும் வேண்டாம்.. ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் பாண்டிங்கை எங்கள் அணியின் பயிற்சி குழுவில் எடுப்பேன் என்று பதிலளித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
We will pick ponting to England team, if chances are there says England captain eoin morgan.
Story first published: Friday, May 24, 2019, 17:21 [IST]
Other articles published on May 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X