For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்று தருமா இந்த மூவேந்தர் கூட்டணி…? ஓர் அலசல்

மும்பை:இந்திய அணியில் 3 முக்கிய வீரர்கள் மனது வைத்தால், உலக கோப்பை இந்தியாவுக்குதான். அந்த மூவேந்தர் யார், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

உலக கோப்பை தொடருக்கு 2 வாரங்களே உள்ளன. தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தயார்படுத்தி வருகின்றன. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியின் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பது தான்.

அது தவிர வெற்றியை தர கூடிய வீரர்களும் அணியில் உள்ளனர். எனவே, 3வது முறையாக இந்தியா உலக சாம்பியன் ஆக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. கோப்பையை வெல்ல காரணமாக அமைய உள்ள 3 முக்கிய வீரர்கள் யார் என்பது தற்போது பார்ப்போம்.

உலக கோப்பைக்கான அந்த அணியில் மீண்டும் இணையும் அதிரடி வீரர்... ஏக குஷியில் ரசிகர்கள் உலக கோப்பைக்கான அந்த அணியில் மீண்டும் இணையும் அதிரடி வீரர்... ஏக குஷியில் ரசிகர்கள்

பும்ரா சூப்பர்

பும்ரா சூப்பர்

சந்தேகமின்றி தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால், அது பும்ரா தான். அபார பந்துவீச்சு தாக்குதலால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து விக்கெட்களை கைப்பற்றுகிறார். அவரது யார்க்கர் பந்துகள் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் முக்கிய பங்கு அளிக்கிறது.

19 விக்கெட்டுகள் அபாரம்

19 விக்கெட்டுகள் அபாரம்

எனவே, கேப்டன் கோலி அவரை நன்றாக பயன்படுத்தி, உலக கோப்பையை தம் வசப்படுத்த முனைவார் என்று எதிர்பார்க்கலாம். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்ற பும்ரா 19 விக்கெட்களை கைப்பற்றி உள்ளதை யாரும் மறக்க முடியாது.

ஏறுமுகத்தில் பேட்டிங்

ஏறுமுகத்தில் பேட்டிங்

30 வயதான கேப்டன் கோலி தலை சிறந்த பேட்ஸ்மேன். அனைத்து வகையான போட்டிகளுக்கும் மெருகேற்றியுள்ளார். சொல்ல போனால், 3 ஆண்டுகளாக அவரது பேட்டிங் ரேட் ஏறுமுகம் தான். கடைசியாக அவர் விளையாடிய 50 ஒரு நாள் போட்டிகளில், குவித்த ரன்கள் 3,151. அவற்றில் 14 சதங்கள், 11 அரை சதங்கள். உலக கோப்பையில் அவரது பங்களிப்பு மிக முக்கியம்.

தல தோனி

தல தோனி

அடுத்து, தல... மஹி என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி. கபில்தேவுக்கு பிறகு உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்தவர். இந்த உலக கோப்பை தொடரில் ஓய்வு பெற இருக்கும் 37 வயதான தோனி, இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவர்.

கை கொடுப்பாரா தல?

கை கொடுப்பாரா தல?

எவ்வித சூழ்நிலையும், அணிக்கு வெற்றியை தேடித் தருபவர். அவரின் விக்கெட் கீப்பிங் உலகளவில் பிரபலம். கோலிக்கு ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு பக்க பலமாகவும் உள்ளார். அவரின் அறிவுரை இந்த உலக கோப்பை தொடரில் கோலிக்கு கை கொடுக்கும். இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவர் முக்கிய காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 19, 2019, 13:38 [IST]
Other articles published on May 19, 2019
English summary
Dhoni, Kohli and Bumrah played well means world cup is for India only.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X