For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்களின் கிண்டலை பந்த் எதிர்கொள்ளட்டும்... அப்போதுதான் வழிக்கு வருவார்.. கங்குலி அட்வைஸ்!

தான் கோலியாக இருந்திருந்தால் ரசிகர்களின் கிண்டல்களோடு ரிஷப் பந்த் வெற்றியை தேட அனுமதிப்பேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்: தான் கோலியாக இருந்திருந்தால் ரசிகர்களின் கிண்டல்களோடு ரிஷப் பந்த் வெற்றியை தேட அனுமதிப்பேன் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் தவறாக விளையாடினால் பந்த்தை ரசிகர்கள், தோனியில் பெயரை வைத்து கிண்டல் செய்வதாகவும், இது முறையான செயல் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் பேசிய கோலி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சர்வதேச விளையாட்டிலிருந்து ஒதுங்கியுள்ள தோனிக்கு மாற்றாக களமிறக்கும் முனைப்பில், ரிஷப் பந்த்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகளவிலான வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறிவருகிறார்.

சிறந்த ஆட்டத்தை தரத்தவறும் பந்த்

சிறந்த ஆட்டத்தை தரத்தவறும் பந்த்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் கேப்டன் தோனி விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக ரிஷப் பந்த் களமிறங்கி விளையாடி வருகிறார். இதற்கென அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை பயன்படுத்த அவர் தவறி வருகிறார்.

அதிருப்திக்கு உள்ளாகிவரும் ரிஷப் பந்த்

அதிருப்திக்கு உள்ளாகிவரும் ரிஷப் பந்த்

இந்தியாவின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பராக உள்ள ரிஷப் பந்த், வங்க தேசத்திற்கு எதிரான 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதேபோல இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 23 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களம்

ஆயினும் ரிஷப் பந்த்திற்கு இந்திய அணியில் விளையாட தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்றுமுதல் துவங்கவுள்ள டி20, டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார்.

ரசிகர்களின் செயலுக்கு அதிருப்தி

ரசிகர்களின் செயலுக்கு அதிருப்தி

மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கோலி, இந்தியாவிற்காக ஒரு வீரர் விளையாடினால் அவரை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மைதானத்தில் பந்த் ஏதாவது தவறு செய்தால் உடனடியாக தோனியின் பெயரை உச்சரித்து ரசிகர்கள் அவரை இழிப்படுத்துவதாக தெரிவித்தார்.

"வெற்றியை தேடச் செய்வேன்"

இந்நிலையில் தான் கோலியாக இருந்திருந்தால், ரசிகர்களின் இத்தகைய கிண்டல்களுக்கிடையிலேயே ரிஷப் பந்த் தனது வெற்றிக்கான வழியை தேடச் செய்வேன் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

தலைமுறை வீரர் தோனி என புகழாரம்

தலைமுறை வீரர் தோனி என புகழாரம்

இந்த தலைமுறைக்கான வீரர் தோனி என புகழாரம் சூட்டிய கங்குலி, ஒரே நாளில் தோனியாக முடியாது என்றும் கூறியுள்ளார். தோனிக்கே முழுமையான கிரிக்கெட் வீரராக 15 ஆண்டுகள் தேவைப்பட்டது என குறிப்பிட்ட அவர், ரிஷப் பந்த்தும் 15 ஆண்டுகள் கழித்து தோனியின் சாதனைகளை நெருங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 6, 2019, 17:06 [IST]
Other articles published on Dec 6, 2019
English summary
Hear those chants and find ways to Succeed - Ganguly advises to Pant
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X