For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக்.கை வீழ்த்தணுமா..? அப்ப டாசில் இந்தியா தோற்கணும்..! தலையை சுற்ற வைக்கும் புள்ளி விவரம்..!!

மான்செஸ்டர்:பாகிஸ்தானுடன் ஜெயிக்க வேண்டும் என்றால் டாசில் இந்தியா தோற்க வேண்டும் என்ற புள்ளி விவரம் இந்திய ரசிகர்களை தலை சுற்ற வைத்துள்ளது.

இங்கிலாந்தின் பழைமையான மைதானங்களில் ஒன்று ஓல்டு ட்ராபோர்டு (பெயரிலே ஓல்டு இருப்பதை கவனிக்கலாம்). 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு போட்டிக்கு பிறகு, தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு போட்டி.

1999ல் வென்றது இந்தியா. 2019ம் ஆண்டு போட்டியும் அதே ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில். ஆனால்... தற்போது காட்சிகள் வேறு. ஆனால் மாறாதது இந்த மைதானத்தில் வொர்க் அவுட்டாகும் இந்திய அணியின் ராசி. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் ரஞ்சித் சிங் முதல் சதம்அடித்தது இங்கு தான்.

1959ல் சதம்

1959ல் சதம்

தமது முதல் வெளிநாட்டு பயணத்தை 1936-ம் ஆண்டு ஓல்டு ட்ராபோர்டில் தான் தொடங்கியது இந்தியா. அப்போது இந்திய அணியின் சயத் முஷ்டாக் அலி, விஜய் மெர்சன்ட் ஆகியோர் சதம் அடித்தனர். 1959-ம் ஆண்டு அப்பாஸ் அலி தனது 20-வது வயதில் சதம் அடித்தார்.

கவாஸ்கர் ஆட்டம்

கவாஸ்கர் ஆட்டம்

அதற்கு பிறகு 1974-ம் ஆண்டில் கட்டை மன்னன் கவாஸ்கர் சதம் அடித்ததும் இதே மைதானத்தில் தான். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்த மைதானத்தில் வைத்துதான் இந்தியா தோற்கடித்தது.. அதையும் எந்த தருணத்திலும் மறக்க முடியாது.

2வது முறை ஆட்டம்

2வது முறை ஆட்டம்

இதுவரை 47 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் 1999ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி ஸ்பெஷல். இந்தியா, பாகிஸ்தான் மோதிய அந்த போட்டியில், 47 ரன்களில் இந்திய அணி வென்றது. அதன் பிறகு... 2வது முறையாக இந்த மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் நடக்கிறது.

சேசிங்கில் அதிக வெற்றி

சேசிங்கில் அதிக வெற்றி

ஓல்டு ட்ராபோர்டு மைதானத்தில் டாசுக்கு என்று ஒரு தனி சரித்திரம் இருக்கிறது. இதுவரை டாசில் ஜெயித்து, முதலில் பேட் செய்த அணிகள் 40 சதவீதம் மட்டுமே வென்றுள்ளன. ஆனால், சேசிங் செய்த அணிகளில் 60 சதவீதம் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே, இந்திய அணிக்கு டாஸ் சமாச்சாரம் ரொம்ப முக்கியம். இந்தியா, டாசில் கட்டாயம் ஜெயித்தே ஆக வேண்டும்.

சேசிங்கில் 27 முறை

சேசிங்கில் 27 முறை

46 போட்டிகளி்ல் இதுவரை டாஸ் வென்ற அணிகள் 28 முறை முதலில் பேட்டிங் செய்து, 10 முறை தான் ஜெயித்திருக்கிறது. ஆனால், டாசில் வென்று பீல்டிங் செய்த அணிகள் 9 முறை வென்றிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக சேசிங் செய்த அணிகள் 27 முறையும், முதலில் பேட் செய்த அணிகள் 18 முறையும் வென்றுள்ளன.

16ல் ஜெயித்த இந்தியா

16ல் ஜெயித்த இந்தியா

இந்திய அணியைப் பொருத்தவரை 2018ம் ஆண்டில் 22 போட்டிகளில் 16 ஆட்டங்களில் சேசிங் செய்து தான் வென்றுள்ளது. ஆதலால் இந்திய அணிக்கு சேசிங் பெரிய விஷயம் கிடையாது. சராசரியாக 216 ரன்களும், அதிகபட்சமாக 256 ரன்கள்தான் அடிக்கும் அளவுக்கு குறைவான ஸ்கோர் செய்யும் ஆடுகளம். 2010ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களின் எண்ணிக்கை 10 மட்டுமே.

300 ரன்களும் உண்டு

300 ரன்களும் உண்டு

மொத்தமே 3 முறைக்கு மேல் தான் 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 318 ரன்கள் குவித்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ஒரு தடவை 300 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு பாடு ஏக திண்டாட்டம். ஆக.. மொத்தத்தில், டாஸ் தான் அணியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது என்பது தான் கடந்த கால புள்ளிவிவரம்.

பாஸ்ட் பவுலிங்

பாஸ்ட் பவுலிங்

வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம். ஆக... குல்தீப்புக்கு மாற்றாக சமி வரலாம். பாகிஸ்தானில் வஹாப் ரியாஸ், அப்ரிடி, முகமது அமீர் கட்டாயம் இடம் பெறுவார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 5 முதல் 6 ரன்கள் வரை கொடுத்துள்ளனர். எனவே வேகப்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவசியம்.

Story first published: Saturday, June 15, 2019, 19:17 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
If india need victory have to lose toss against pakistan match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X