For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த தம்பி ஒழுங்கா விளையாடினா தான்.. அந்த தம்பி உருப்படுவாரு..! முன்னாள் வீரரின் பளிச் கருத்து

மும்பை: ஸ்ரேயாஸ் அய்யர் 4ம் வரிசைக்கு விளையாட அனுப்பப்பட்டால், ரிஷப் பன்ட் இயல்பான ஆட்டத்தை ஆட வழி ஏற்படுத்தி கொடுக்கும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி க்யூன் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் எடுத்தனர். போட்டியில் கோலி பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்டட் 26 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

எனக்கு வேற வழியே தெரியல...! அதான் இப்படி பண்ணிட்டேன்...! கோலி சொன்ன பகீர் விஷயம் எனக்கு வேற வழியே தெரியல...! அதான் இப்படி பண்ணிட்டேன்...! கோலி சொன்ன பகீர் விஷயம்

சாதனை காலி

சாதனை காலி

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜாவேத் மியான்டட் (1930) முதல் இடத்தில் நீடித்து வந்தார். போட்டியில் கோலி (1931) 19 ரன்களை கடந்த போது மியான்டட் சாதனையை காலி செய்தார்.

பேட்டிங் ஆர்டர் எப்படி?

பேட்டிங் ஆர்டர் எப்படி?

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மிடில் ஆர்டரில் சூழலுக்கு ஏற்ப வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கோலி சொன்னார்.

2 ஆண்டுகள் பேட்டிங்

2 ஆண்டுகள் பேட்டிங்

வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் நன்றாக ஆடும் வீரர்கள், 2 ஆண்டுகளாகவே பேட்டிங் வரிசையில் முன்னேறி இருக்கின்றனர். எனவே கண்டிப்பாக ஸ்ரேயாஸ் அய்யர் 4ம் வரிசைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

வலிமையாக மாறும்

வலிமையாக மாறும்

அப்படி அவர் 4ம் வரிசையில் ஆடுவது, ரிஷப் பன்டுக்கு அவரது இயல்பான ஆட்டத்தை ஆட வழி ஏற்படுத்தி கொடுக்கும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் முன்பை விட வலிமையான ஒன்றாக மாறும் என்றார்.

Story first published: Tuesday, August 13, 2019, 13:53 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
If young player shreyas Iyer at 4 means, it allows rishabh Pant to play natural game, says zaheer Khan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X