For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆடாட்டி சம்பளம் கிடைக்காதுப்பா.. என்ன எஜமான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க

மும்பை: ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால் வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்காது என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

Recommended Video

போட்டி நடந்தால் மட்டுமே வீரர்களுக்கு சம்பளம்

ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளுக்கும் கூட இது பொருந்தும். காரணம், கொரோனாவைரஸ் தாக்கத்தால் மிகப் பெரிய இழப்பு நமக்கு ஏற்பட்டுள்ளது என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு தாமதமாகியுள்ளன. நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் உள்ளது. இதனால் வீரர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். அதேசமயம் போட்டியை சில மாதங்கள் கழித்து நடத்தும் யோசனையில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது.

விளையாடாவிட்டால் சம்பளம் இல்லை

விளையாடாவிட்டால் சம்பளம் இல்லை

இந்த நிலையில் போட்டிகள் நடைபெறாமல் போனால் வீரர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மல்ஹோத்ரா கூறியுள்ளார். தற்போதைய விதிப்படி போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்பு சம்பளத்தில் 15 சதவீத தொகை வீரர்களுக்கு அளிக்கப்படும். போட்டி காலத்தில் 65 சதவீத தொகை தரப்படும். மீதமுள்ள 20 சதவீத தொகை போட்டி முடிந்ததும் கொடுக்கப்படும்.

ரூல்ஸ் தெளிவா இருக்கு

ரூல்ஸ் தெளிவா இருக்கு

இதை வைத்துத்தான் இப்படிக் கூறியுள்ளார் மல்ஹோத்ரா. அவர் கூறுகையில், பிசிசிஐ விதிமுறைகள் தெளிவாக உள்ளன. போட்டிகள் நடைபெறாவிட்டால் வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இப்படி நிலைமை ஏற்படும் பட்சத்தில் உள்ளூர் வீரர்களுக்கும் கூட சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரிழப்பு ஏற்படும்

பேரிழப்பு ஏற்படும்

தற்போதைய சூழல் தொடர்ந்தால் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கத்தான் தற்போது கிரிக்கெட் வாரியம் போட்டியை எப்படியாவது நடத்தி விட முடியாதா என்று தீவிர பரிசீலனையில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்கு தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஆனால் அப்போதும் கூட தொடங்குமா என்பது சந்தேகம்தான்.

மேலும் தள்ளிப் போகுமா

மேலும் தள்ளிப் போகுமா

கொரோனாவைரஸ் பாதிப்பு தற்போது இந்தியாவில் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. உலகம் முழுவதும் 37,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. எனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 15ம் தேதி தொடரை தொடங்குவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இதனால் போட்டித் தொடரை ஆகஸ்ட் - செப்டம்பரில் நடத்தலாமா என்ற யோசனையில் பிசிசிஐ உள்ளதாம்.

Story first published: Tuesday, March 31, 2020, 18:31 [IST]
Other articles published on Mar 31, 2020
English summary
ICA Chief Ashok Malhotra said that if there is no IPL Means then No Salaries For Players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X