For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க காலத்தில யோ-யோ டெஸ்ட் இருந்திருந்தா சச்சின் உள்ளிட்டவங்க யாரும் பாஸ் பண்ணியிருக்க மாட்டோம்!

டெல்லி : தற்போது வீரர்களின் பிட்னசை நிரூபிக்க யோ-யோ டெஸ்ட் அவசியமானதாக உள்ளது.

இந்நிலையில் தங்களது காலத்தில் யோ-யோ டெஸ்ட் அவசியமானதாக இருந்திருந்தால் சச்சின் உள்ளிட்டவர்கள் யாரும் தேறியிருக்க மாட்டார்கள் என்று முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.

மேலும் தங்களது காலத்தில் பீப் டெஸ்ட்டில் தேவையான 12.5 மார்க்குகளையும் எடுக்க ஒரு சில வீரர்கள் திணறியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வீரர்கள் தவிப்பு

வீரர்கள் தவிப்பு

இந்திய அணிக்கு தேர்வாவதற்கு தற்போது யோ -யோ டெஸ்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த டெஸ்ட்டில் தேற முடியாமல் அணியில் இடம்பெற முடியாமல் பல்வேறு முக்கிய வீரர்கள் தவித்து வருகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம் வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டிவேட்டியா. இதில் இரண்டாவது முயற்சியில் டிவேட்டியா பாஸ் செய்து அணியில் இடம்பெற்ற நிலையில் வருண் சக்ரவர்த்தி இன்னும் தேறாமல் உள்ளார்.

சச்சின் உள்ளிட்டோர் தேறியிருக்க மாட்டார்கள்

சச்சின் உள்ளிட்டோர் தேறியிருக்க மாட்டார்கள்

இந்நிலையில் ரசிகர் ஒருரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக், தற்போது மேற்கொள்ளப்படும் யோ-யோ டெஸ்ட் தங்களது காலத்தில் இருந்திருந்தால் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லஷ்மன் போன்றோர் தேறியிருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தேறாத முன்னாள் வீரர்கள்

தேறாத முன்னாள் வீரர்கள்

மேலும் தங்களது காலத்தில் நடத்தப்பட்ட பீப் டெஸ்ட்டில் தேற தேவையான 12.5 மார்க்குகளை கூட எடுக்க முடியாத முன்னணி வீரர்கள் இருந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கிரிக்கெட் வீரர்களுக்கு பிட்னஸ் மட்டும் இருந்து திறமை இல்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதை தேர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

10 ஓவர்கள் வீச திறமை வேண்டும்

10 ஓவர்கள் வீச திறமை வேண்டும்

ஒரு வீரருக்கு முக்கிய தேவை 10 ஓவர்களை போட்டியின் போது சிறப்பாக வீசுவதும் பீல்டிங் செய்வதும்தான் என்றும் அதுவே வீரர்களுக்கு போதுமானது என்றும் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். பிட்னசை போட்டியில் விளையாடிக் கொண்டே ஓவர்டைமாக நிரூபிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 1, 2021, 17:19 [IST]
Other articles published on Apr 1, 2021
English summary
If a player can field and bowl 10 overs, that should be enough, we shouldn’t be concerned about the other things -Sehwag said
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X