For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் ஒழுங்காவே ஆடலை.. அப்ப இந்தியா என்ன பண்ணாங்க தெரியுமா? பாக். டீமிலும் அதை செய்யணும்!

இஸ்லாமாபாத் : சரியாக ஆடாத ரோஹித் சர்மாவை இந்திய அணி ஆதரித்தது போல பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தன் வீரர்களை ஆதரிக்க வேண்டும் என கூறி உள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்.

Recommended Video

Imam Ul Haq on Rohit Sharma | ரோஹித் சர்மாவை இந்தியா ஆதரித்தது: இமாம் உல் ஹக்

ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வை துவக்கம் முதல் கவனித்து வருபவர்களுக்கு இமாம் என்ன சொல்ல வருகிறார் என தெளிவாக புரியும்.

ரோஹித் சர்மா துவக்க வீரராக மாறும் முன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் சுமாராகவே இருந்தன.

ஆஸ்திரேலியாவுல இந்தியா விளையாட வரலைன்னா நிலைமை மோசமாயிடும்ஆஸ்திரேலியாவுல இந்தியா விளையாட வரலைன்னா நிலைமை மோசமாயிடும்

தோனி நம்பிக்கை

தோனி நம்பிக்கை

எனினும், ரோஹித் சர்மா மீது கேப்டன் தோனி நம்பிக்கை வைத்தார். தொடர்ந்து இந்திய தேர்வுக் குழு ரோஹித் சர்மாவை தேர்வு செய்து வந்தது. அவர் அறிமுகம் ஆகி பல ஆண்டுகள் சென்ற பின்னர் துவக்க வீரராக மாறினார். அதன் பின்னரே நம்பிக்கையான வீரராக அணியில் வலம் வந்தார்.

ஆல் - ரவுண்டர் ரோஹித்

ஆல் - ரவுண்டர் ரோஹித்

20௦7இல் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம் பெற்றார். அப்போது அவர் அணியில் ஆல் - ரவுண்டர். பகுதி நேரமாக சுழற் பந்து வீசுவார். 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் அவரது திறமை முதலில் வெளிப்பட்டது. ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகள் வரை அவர் அணியில் தன் முத்திரையை பதிக்க முடியாமல் திணறினார்.

2013 சாம்பியன்ஸ் ட்ராபி

2013 சாம்பியன்ஸ் ட்ராபி

2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் கேப்டன் தோனி அவரை துவக்க வீரராக களமிறங்க வைத்தார். தவான் - ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தனர். ரோஹித் சர்மா அப்போது முதல் ரன் குவிக்கத் துவங்கினார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரரும் அவர் தான்.

ரோஹித் உதாரணம்

ரோஹித் உதாரணம்

ஒரு வீரரை தொடர்ந்து ஆதரித்தால் அவர் எத்தனை பெரிய வீரராக மாறுவார் என ரோஹித் சர்மாவை பலரும் உதாரணம் கூறி வருகின்றனர். அதை அப்படியே பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிட்டு இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக்.

பாகிஸ்தான் அணி நிலை

பாகிஸ்தான் அணி நிலை

பாகிஸ்தான் அணி 2019 உலகக்கோப்பை தொடர் முதல் மோசமான நிலையில் உள்ளது. வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். அது அணியில் வீரர்கள் இடையே பயத்தை உண்டாக்கி இருப்பதாக கூறி உள்ளார் இமாம் உல் ஹக்.

இதே போல செய்ய வேண்டும்

இதே போல செய்ய வேண்டும்

அதனால் ஒழுங்காக ஆடாத போது ரோஹித் சர்மாவை இந்திய அணி ஆதரித்தது போல, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தங்கள் வீரர்களை ஆதரிக்க வேண்டும் என இமாம் உல் ஹக் அதிரடி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ ஒன்றில் பேசிய இமாம் உல் ஹக், "நம் அணியிடம் தோல்வி அடைவோமா என்ற பயம் உள்ளது. என் தனிப்பட்ட கணிப்பு என்னவென்றால், அதனால் தான் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது. இரண்டு அல்லது மூன்று முறை மோசமாக ஆடினால் அணியில் இருந்து நீக்கப்படுவோமோ என்று அவர்கள் கவலை அடைகின்றனர்." என்றார்.

மற்ற அணிகளில்..

மற்ற அணிகளில்..

மேலும், "வீரர்கள் மற்றும் போர்டு இடையே ஆன தொடர்பு குறைந்து போவதும் வீரர்கள் சரியாக ஆடாமல் போக முக்கிய காரணம். மற்ற அணிகளில் இந்த பிரச்சனை இல்லை." எனவும் பாகிஸ்தான் அணி நிலைமை குறித்து சுட்டிக் காட்டினார் இமாம் உல் ஹக்.

இந்தியா ரோஹித்தை நம்பியது

இந்தியா ரோஹித்தை நம்பியது

அடுத்து ரோஹித் சர்மாவை உதாரணம் காட்டினார். "உதாரணத்திற்கு, ரோஹித் சர்மாவை எடுத்துக் கொண்டால் அவர் துவக்கத்தில் சரியாக ஆடவில்லை. ஆனால், இந்தியா அவரை நம்பியது. அவர் பின்னர் சிறப்பாக ஆடினார்" என்றார் இமாம் உல் ஹக்.

Story first published: Monday, May 4, 2020, 20:25 [IST]
Other articles published on May 4, 2020
English summary
Imam Ul Haq want PCB to support players like how India did for Rohit Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X