For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2008ல விராட் கோலி... இப்போ தேவ்தத் படிக்கல்... வீரர்கள் வேறதான்... சாதனை ஒண்ணு!

டெல்லி : விஜய் ஹசாரே 2021 கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் கேரளா அணியுடன் கர்நாடகா அணி மோதி வருகிறது.

இந்த போட்டியில் கேப்டன் சமர்த் 192 ரன்களை அடித்துள்ள நிலையில் அணி வீரர் தேவ்தத் படிக்கல்லும் சதத்தை கடந்துள்ளார்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இதுவரை இந்த தொடரில் படிக்கல் தொடர்ந்து 4 சதங்களை அடித்துள்ளார். கடந்த 2008ல் கேப்டன் விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் 4 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஹசாரே கோப்பை

விஜய் ஹசாரே கோப்பை

இந்தியா -இங்கிலாந்து தொடர்களுக்கு இணையாக உள்ளூரின் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிக்கான தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் காலிறுதியை அடைந்துள்ளது. இன்றைய தினம் கர்நாடகா மற்றும் கேரள அணிகள் மோதி வருகின்றன.

சமர்த் 192 ரன்கள்

சமர்த் 192 ரன்கள்

இதில் கர்நாடக கேப்டன் சமர்த் 158 பந்துகளில் 192 ரன்களை குவித்த நிலையில் அணியின் தேவ்தத் படிக்கல்லும் சதத்தை கடந்துள்ளார். இது இந்த தொடரில் அவர் அடிக்கும் தொடர் 4வது சதமாகும். கடந்த 2008ல் கேப்டன் விராட் கோலி இதே விஜய் ஹசாரே கோப்பைக்காக 4 சதங்களை அடித்த நிலையில் தற்போது படிக்கல் அந்த சாதனையை மேற்கொண்டுள்ளார்.

4 சதங்கள்... 2 அரைசதங்கள்

4 சதங்கள்... 2 அரைசதங்கள்

மேலும் இந்த தொடரில் அவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 673 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும். ஒரு போட்டியில் 97 ரன்கள் வரை அடித்து சதத்தை தவறவிட்டுள்ளார். மேலும் கடந்த 2019 தொடரில் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் 609 ரன்களை அவர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமர்த்தின் 3வது சதம்

சமர்த்தின் 3வது சதம்

கர்நாடக அணியின் ரன் மெஷினாக அவர் விளங்குகிறார். மேலும் அடுத்தடுத்து தொடர்ந்து 4 சதங்களை அவர் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் சமர்த் மற்றும் படிக்கல் இருவரும் அடுத்தடுத்து தங்களது சதங்களை அணிக்கு சிறப்பாக வழங்கியுள்ளன. சமர்த் இந்த தொடரில் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.

Story first published: Monday, March 8, 2021, 14:13 [IST]
Other articles published on Mar 8, 2021
English summary
4th consecutive hundred for 20-year-old Devdutt Padikkal in Vijay Hazare 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X