For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினை புகழக்கூடாது.. மிஸ்பா மொக்கை வீரர்.. ஆனா புகழணும்.. ஏன்னா அவர் பாகிஸ்தானி!

மும்பை : சமீபத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோலி மற்றும் இதர இந்திய வீரர்களை பிடிக்காது என கூறினார்.

விராட் கோலி இதற்கு பதிலடியாக "நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம். இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது சரியில்லை" என கூறினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆகியது. கோலி கூறியது தவறு என பெரும்பாலோனோர் கூறினர்.

2013இல் நடந்த சம்பவம்

2013இல் நடந்த சம்பவம்

இந்த நிலையில், இது போல தன் நாட்டு வீரர்களை மட்டுமே பிடித்திருக்க வேண்டும், புகழ வேண்டும் என பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2013இல் அந்த நாட்டு மீடியாவிற்கு கூறிய சம்பவம் மீண்டும் இணையத்தில் வலம் வரத் துவங்கியுள்ளது.

சச்சினை பாராட்டக் கூடாது

சச்சினை பாராட்டக் கூடாது

2013இல் சச்சின் சாதனையை பாகிஸ்தான் மீடியாவில் அதிகம் புகழ்ந்தனர். அதை கண்டு வெகுண்ட தாலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தான் மீடியாவை கண்டித்து ஒரு வீடியோவை வெளியிட்டனர். சச்சினை பாராட்டும் வகையில் செய்திகள் வெளியிடக் கூடாது என அதில் எச்சரித்து இருந்தனர்.

தாலிபான் விடுத்த எச்சரிக்கை இதுதான்

தாலிபான் விடுத்த எச்சரிக்கை இதுதான்

அந்த வீடியோவில் குறிப்பாக, "ஒரு இந்திய விளையாட்டு வீரர் டெண்டுல்கர் என்பவரை பாகிஸ்தான் மீடியா புகழ்ந்து வருகின்றன. நிறைய பாகிஸ்தானியர்கள் கூட அவரை பாராட்டுகிறார்கள். அதே சமயம், பாகிஸ்தான் மீடியா மிஸ்பா-உல்-ஹக்கை புறக்கணித்து வருகின்றன. டெண்டுல்கர் பெரிய வீரர் என்றாலும் அவரை புகழக் கூடாது. அது நம் தேசிய நோக்கத்துக்கு எதிரானது. அதற்குப் பதிலாக நீங்கள் மோசமாக ஆடினாலும் மிஸ்பா-உல்-ஹக்கை தான் புகழ வேண்டும். ஏனெனில், அவர் ஒரு பாகிஸ்தானி" என கூறி இருந்தனர்.

சிறப்பாக செயல்பட்டால் பாராட்டலாம்

சிறப்பாக செயல்பட்டால் பாராட்டலாம்

இப்படி ஒரு மோசமான கருத்தோடு எச்சரிக்கை வீடியோ எடுத்து 2013இல் வெளியிட்டது தாலிபான். விளையாட்டு என்பது பொதுவானது. அதில் அவரவர் தம் நாட்டை ஆதரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே சமயம் மற்ற நாடோ, அதன் வீரர்களோ சிறப்பாக செயல்பட்டால் பாராட்டுவதில் தவறேதும் இல்லை.

Story first published: Sunday, November 11, 2018, 17:56 [IST]
Other articles published on Nov 11, 2018
English summary
In 2013 Taliban lashed out Pakistan media for praising Sachin Tendulkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X