டிசம்பர் ஆஸி.வுக்கு.. பிப்ரவரி இங்கிலாந்துக்கு.. இது எப்படி இருக்கு? கங்குலி தாறுமாறு திட்டம்!

டெல்லி : வரும் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Australia vs England Series 2020 confirmed | OneindiaTamil

இந்த தொடர் அடுத்த ஆண்டின் ஐபிஎல்லுக்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படும் என்று கங்குலி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடர் கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில் தற்போது பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1990ல் இதே நாளில்... சச்சின் அடித்த முதல் செஞ்சுரி.. நினைவுகூர்ந்த பிசிசிஐ

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திட்டம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திட்டம்

இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் இங்கிலாந்து அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த தொடர் தள்ளிப் போனது. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் இந்தியா -ஆஸி. தொடர்

டிசம்பரில் இந்தியா -ஆஸி. தொடர்

முன்னதாக இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்து நேரிடையாக இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு குவாரன்டைன் உள்ளிட்ட நடைமுறைகளை முடித்துக் கொண்டு டிசம்பரில் துவங்கவுள்ள ஒரு பகலிரவு உள்ளிட்ட டெஸ்ட் தொடர் உள்ளிட்டவற்றில் பங்கேற்க உள்ளது.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணியினர் இந்தியா வரவுள்ள நிலையில், இங்கு டெஸ்ட் தொடர் நடத்தப்பட உள்ளதாக தற்போது சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயண திட்டத்தின்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்கீழ் 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன்படி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்தியா அடுத்தடுத்து மோதவுள்ளதாக கங்குலி கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை நடத்த தயார்

டி20 உலக கோப்பை நடத்த தயார்

இந்த இங்கிலாந்து தொடர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மன்னதாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதங்களில் ஐபிஎல் தொடர்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியா டி20 உலக கோப்பை தொடரை நடத்த தயாராக உள்ளதாகவும் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England Series to be held ahead of the 2021 IPL season -Ganguly
Story first published: Sunday, August 23, 2020, 17:42 [IST]
Other articles published on Aug 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X