For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒத்த ஸ்டெம்பிங்.. உண்டு,இல்லை என்று பண்ணிய டர்னர்.. இப்ப புரிகிறதா தோனியோட அருமை

மொகாலி:தோனி இல்லாத நிலையில்... பொறுப்பற்ற ஒரு ஸ்டெம்பிங்கால் தப்பித்த டர்னர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த காட்டடியால் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங், உருப்படியில்லாத பந்துவீச்சு ஆகியவற்றால், மிகப்பெரிய ஸ்கோர் எடுத்தும் மொகாலி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்ற வேண்டிய எளிதான வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் வெற்றியை தம் வசம் வைத்திருந்த இந்தியா.. அந்த அதீத நம்பிக்கையால் என்னவோ தோல்வியை பரிசாக கொண்டுவிட்டது. கிட்டத்தட்ட 5 வாய்ப்புகள், டர்னரின் ஸ்டம்பிங்கை கோட்டை விட்டது.. அதன் விளைவு டர்னரின் அதிரடி என இந்திய ரசிகர்கள் ஏமாந்து போயினர்.

போட்டியின் இடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் நியூசிலாந்து கேப்டன்! போட்டியின் இடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் நியூசிலாந்து கேப்டன்!

4 விக்கெட்டுகள் வெற்றி

4 விக்கெட்டுகள் வெற்றி

முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. 359ரன்கள் என்ற இலக்கை விரட்டிய, ஆஸ்திரேலிய அணி 13 பந்துகள் மீதிமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் சமநிலை

இரு அணிகளும் சமநிலை

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்று சமநிலையில் உள்ளனர். குறிப்பாக உஸ்மான் கவாஜாவின் 91 ரன்கள், ஹேண்ட்ஸ்கம்பின் முதல் சதம்(117), டர்னரின் 84 (43) காட்டடி ஆட்டம் ஆகியவை ஆஸி. வெற்றிக்கு காரணமாக இருந்தது.

முழுமையில்லாத ஆட்டத்திறன்

முழுமையில்லாத ஆட்டத்திறன்

குறிப்பாக.... ரிஷப் பண்ட் இன்னும் நிறைய கற்க வேண்டும். அவரது ஆட்டத் திறன் முழுமை அடையவில்லை. ஸ்டெம்பெங்கிலும், பேட்டிங்கிலும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டார்.

பிசிசிஐ கவனம்

பிசிசிஐ கவனம்

பொறுப்பற்ற, சூழ்நிலையை உணர்ந்து விளையாட அவரை பிசிசிஐ ஏன் இந்த தாங்கு தாங்குகிறது என்று தெரியவில்லை. அவரையே உலக கோப்பைக்கு மாற்று விக்கெட் கீ்ப்பராக ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பதும் பிசிசிஐக்கே வெளிச்சம்.

தினேஷ் கார்த்திக் வேண்டும்

தினேஷ் கார்த்திக் வேண்டும்

ரிஷப் பண்டுக்கு பதிலாக அனுபவம் நிறைந்த தினேஷ் கார்த்திக்கை உலக கோப்பைக்கு தேர்வு செய்யலாம். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த கூடிய ஸ்டெம்பிங்கை டர்னருக்கு ரிஷப் பண்ட் அள்ளிக் கொடுத்ததே தோல்வி அடைய முக்கியக் காரணியாகி விட்டது.

தோனியின் அருமை

தோனியின் அருமை

இந்த நேரத்தில்தான் அணியில் தோனி இல்லாத வெற்றிடம் தெரிய வருகிறது. தோனி இருந்தால் அங்கு நிலைமையே வேற.... மின்னல் வேக ஸ்டெம்பிங்காக மாறி... வைரல் வீடியோவாகி இருக்கும்.

நங்கூரமிட்ட டர்னர்

நங்கூரமிட்ட டர்னர்

போதாத குறைக்கு... கடைசி நேரத்தில் கைக்கு கிடைத்த கேட்சை டைவ் அடிக்கிறேன் பேர்வழி என்று கூறி பந்தா பண்ணி கோட்டைவிட்ட கேதார் ஜாதவ், நன்றாக ரன் அடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் கேட்ச்சை கோட்டை விட்ட ஷிகர் தவன் ஆகியோர் டர்னர் நிலைத்து நின்று ஆட வழிவகை செய்தார்கள் என்றே கூறலாம்.

ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

ரிஷப் பண்ட், தவான், கேதர் ஜாதவ் ஆகிய 3 பேரும் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் போது தமது பொறுப்புகளை உணர்ந்து விளையாடி இருக்கலாம். அப்படி இருந்திருந்தால், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Monday, March 11, 2019, 15:30 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
In the absence of dhoni, turner escaped in a stumped recklessly using the opportunity to make India the worst hit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X