For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் சொல்றேங்க… செமி பைனலில் இந்தியாவோட 4 அணிகள் வரும்… பைனலில் இந்த அணிகள் மோதும்

மும்பை:இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் தான் உலக கோப்பை அரையிறுதியில் ஆடும் என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்காக கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தயாராகி விட்டன. விராட் கோலி தலைமையிலான இந்தியா, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்பது பலரது கணிப்பாகும்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் குப்தில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். அந்த அணியும் உலக கோப்பை தொடரில் நெருக்கடி கொடுக்கும் என்று தெரிகிறது.

 ஓப்பனராக நான் இறங்க ரெடி... நீங்க ரெடியா? ஆசைப்படும் சன்ரைசர்ஸ் சாஹா ஓப்பனராக நான் இறங்க ரெடி... நீங்க ரெடியா? ஆசைப்படும் சன்ரைசர்ஸ் சாஹா

மகிழ்ச்சியில் ஆஸி.

மகிழ்ச்சியில் ஆஸி.

ஓராண்டாக திணறிய ஆஸ்திரேலியா, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. அந்த அணிக்கு துணை பயிற்சியாளராக 2 முறை உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

சிறந்த அணிகள் 4

சிறந்த அணிகள் 4

மேற்கிந்திய தீவுகள், தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்தவையே. அந்த அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. அதே நேரத்தில் யாரும் அவ்வளவாக நினைத்து பார்க்காத ஆப்கானிஸ்தான் அணியும் மற்ற அணிகளுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் வீரர்கள் கருத்து

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு அணியும் ஒரு கட்டத்தில் பலம் வாய்ந்தவையாக காணப்பட்ட போதிலும் எந்த அணிக்கு கோப்பை என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

வில்லியர்ஸ் கணிப்பு

வில்லியர்ஸ் கணிப்பு

இந்நிலையில், தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ஏபி டிவில்லியர்ஸ், அரையிறுதியில் ஆடும் 4 அணிகள் எது என்று தமது கருத்துகளை கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்குள் நுழையும். இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மிகவும் வலுவாக உள்ளன.

இந்திய அணி வலுவானது

இந்திய அணி வலுவானது

இந்திய அணியில் விராட் கோலி தலைமையிலான அணி வலுவான உள்ளது. வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர்.

உலக கோப்பை யாருக்கு?

உலக கோப்பை யாருக்கு?

இவை தவிர, 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் ஆகிய அணிகளும் திறமையான அணிகள். எனவே இந்த 4 அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆக மொத்தத்தில், டி வில்லியர்ஸ் கருத்து படி... இந்தியா உள்பட 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்று வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு வேளை நடந்து... இறுதி போட்டியில் இந்தியா நுழைந்து கோப்பையை கைப்பற்றினால் மகிழச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, March 16, 2019, 14:33 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
India and England are looking strong, Australia have won five World Cups in the past and Pakistan claimed the Champions Trophy in the UK two years ago. Those four teams are probably the favourites says ab de villiers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X