For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

60,000 வருட வரலாறு.. அப்படியே மறந்துவிட முடியாது.. ஆஸி. அணியின் ஜெர்சி.. அதிர வைக்கும் உண்மை!

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சி அணிந்து ஆட உள்ளனர்.

அந்த ஜெர்சி ஆஸ்திரேலிய பாரம்பரியத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்றே பொதுவாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால், இது கறுப்பின மக்களுக்கு ஆதரவான "பிளாக் லைவ்ஸ் மேட்டர்" இயக்கத்தை ஒட்டி ஆஸ்திரேலிய நாட்டின் உண்மையான குடிமக்களான அபோரிஜினல்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒண்ணு இல்ல எட்டு... பாகிஸ்தான் பயிற்சிக்கு அனுமதி மறுப்பு... நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிரடி! ஒண்ணு இல்ல எட்டு... பாகிஸ்தான் பயிற்சிக்கு அனுமதி மறுப்பு... நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிரடி!

பிளாக் லைவ்ஸ் மேட்டர்

பிளாக் லைவ்ஸ் மேட்டர்

அமெரிக்காவில் பற்றிய கறுப்பின மக்களின் போராட்டமான பிளாக் லைவ்ஸ் மேட்டர் உலகம் முழுவதும் பரவியது. கிரிக்கெட் உலகிலும் இந்த போராட்டம் பரவியது. கறுப்பின வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பலர் இதை முன்னெடுத்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

அவர்கள் தங்களுக்கு நடந்த அவமானங்களை, கிண்டல்களை பற்றி கூறியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. வெள்ளை இன வீரர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிலும் இதே போன்ற சிக்கல்கள் எழுந்தன.

சர்ச்சையில் ஆஸ்திரேலிய அணி

சர்ச்சையில் ஆஸ்திரேலிய அணி

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கு ஆதரவாக முட்டி போடும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அது சர்ச்சை ஆனது. அந்த அணி நிர்வாகம் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

கட்டாயம்

கட்டாயம்

ஆஸ்திரேலிய அணி தங்கள் சார்பாக ஆஸ்திரேலிய நாட்டின் முதல் குடிமக்களான அபோரிஜினல் இனத்தை ஆதரிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆஸ்திரேலிய அணியில் பல அபோரிஜினல் இனத்தை சேர்ந்த வீரர்கள் ஆடி உள்ளனர்.

60,000 ஆண்டு பாரம்பரியம்

60,000 ஆண்டு பாரம்பரியம்

அதை வைத்தும், அபோரிஜினல் இனத்தின் 60,000 ஆண்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வீரர்களின் ஜெர்சியை வடிவமைக்க முடிவு செய்தது. அதே இனத்தை சேர்ந்த ஆன்ட்டி பியோனா கிளார்க் மற்றும் கர்ட்னி ஹேகன் ஆகியோரை கொண்டு அந்த ஜெர்சி வடிவமைக்கப்பட்டது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அந்த ஜெர்சியின் இடம் பெற்று இருக்கும் ஒவ்வொரு விஷயமும் அபோரிஜினல் இனத்தின் வரலாறு மற்றும் ஆஸ்திரேலிய அணியில் ஆடிய அபோரிஜினல் இன கிரிக்கெட் வீரர்களை நினைவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அந்த ஜெர்சியின் இடம் பெற்று இருக்கும் ஒவ்வொரு விஷயமும் அபோரிஜினல் இனத்தின் வரலாறு மற்றும் ஆஸ்திரேலிய அணியில் ஆடிய அபோரிஜினல் இன கிரிக்கெட் வீரர்களை நினைவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் அபோரிஜினல் கிரிக்கெட் அணி

முதல் அபோரிஜினல் கிரிக்கெட் அணி

ஜெர்சியின் பின்புறம் வடிவம் 1868இல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட முதல் அபோரிஜினல் கிரிக்கெட் அணியை நினைவுகூருகிறது. இப்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தங்கள் நாட்டுக்காக ஆடிய அபோரிஜினல் கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறி அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.

கில்லெஸ்பி பாராட்டு

கில்லெஸ்பி பாராட்டு

அபோரிஜினல் இனத்தை சேர்ந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜேசன் கில்லெஸ்பி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இந்த முயற்சியை பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவில் பலர் இப்படி ஒரு இனம் இருப்பதை பற்றி தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என அவர் கூறி உள்ளார்.

Story first published: Friday, December 4, 2020, 13:21 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
IND vs AUS : 60,000 years old aboriginal history porteayed in Australian team jersy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X