ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டினர்.

இனவெறியுடன் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். அதை எதிர்த்து இந்திய வீரர்கள் அம்பயர் மற்றும் மேட்ச் ரெப்ரீயிடம் புகார் அளித்தனர்.

அப்போது அம்பயர் கொடுத்த ஒரு வாய்ப்பை கேப்டன் அஜின்க்யா ரஹானே பயன்படுத்தி இருந்தால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் இப்போது பெரும் சிக்கலில் சிக்கி இருக்கும்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்ட் போட்டியின் போது சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் பும்ராவை இனவெறியுடன் திட்டினர். அவர்கள் கேப்டன் அஜின்க்யா ரஹானேவுடன் அம்பயரிடம் சென்று புகார் கூறினர்.

அம்பயர்கள் சொன்ன யோசனை

அம்பயர்கள் சொன்ன யோசனை

அப்போது நடந்த நிகழ்வுகளை விசாரித்த அம்பயர்கள், இந்திய வீரர்கள் ரசிகர்களின் செயல்பாடுகளால் மன உளைச்சலில் இருந்தால் போட்டியை பாதியில் கைவிட்டு வெளியேறலாம் என கூறி உள்ளனர். விதிப்படி இவ்வாறு செய்யலாம்.

மறுத்த ரஹானே

மறுத்த ரஹானே

ஆனால், அம்பயர் சொன்ன அந்த யோசனையை உடனடியாக மறுத்து இருக்கிறார் அஜின்க்யா ரஹானே. நாங்கள் இந்த விளையாட்டை விரும்பி ஆடுகிறோம். ஆடுகளத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர் திட்டவட்டமாக கூறி, அந்த ரசிகர்களை வெளியேற்றிய பின் தொடர்ந்து இந்திய அணியை ஆடச் செய்தார்.

தப்பித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

தப்பித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா

ஒருவேளை ரஹானே அப்போது இந்திய அணியை வெளியேறும் என அறிவித்து இருந்தால் இந்த டெஸ்ட் தொடர் பாதியில் கைவிடப்பட்டு இருக்கும். அது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்துக்கு பெரும் இழப்பையும், சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கும். ரஹானே முடிவால் தப்பியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Ajinkya Rahane refused to walk out in Sydney test, while the umpired offered so after racist comments.
Story first published: Thursday, January 21, 2021, 20:32 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X