For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு மேட்ச் ஜெயிச்சா போதும்.. ஆஸி. காலி.. டெஸ்ட் தொடருக்கு ஸ்கெட்ச் போட்ட கும்ப்ளே, டிராவிட்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எந்த அணிக்கு வேற்று வாய்ப்பு உள்ளது என அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர்.

இந்திய அணியின் டெஸ்ட் ஜாம்பவான்களான கும்ப்ளே, டிராவிட் என்ன செய்தால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என கூறி உள்ளனர்.

இருவருமே விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் திறன் பெற்று இருப்பதாக கூறினர்.

வெற்றியே இல்ல... ஆனாலும் என்ன கட்ஸ் இருக்கு மோதி பாத்துடலாம்... தோள்தட்டும் ஒடிசா அணிவெற்றியே இல்ல... ஆனாலும் என்ன கட்ஸ் இருக்கு மோதி பாத்துடலாம்... தோள்தட்டும் ஒடிசா அணி

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 2018-19 நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியா அதற்கு பழிதீர்க்க காத்திருக்கிறது.

விராட் கோலி விலகல்

விராட் கோலி விலகல்

ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் அணியில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவு என்றால், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்த உடன் இந்தியா திரும்ப உள்ளார். அது இந்திய அணியின் பேட்டிங்கை பலவீனமாக்கும் என்ற அச்சம் உள்ளது.

அனில் கும்ப்ளே என்ன சொன்னார்?

அனில் கும்ப்ளே என்ன சொன்னார்?

இந்த நிலையில் இது குறித்து பேசிய அனில் கும்ப்ளே, இந்திய அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றால் போதும், அந்த எழுச்சியை கொண்டே அடுத்த மூன்று போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டு தொடரை கைப்பற்ற முடியும் என்றார்.

ஒரு வீரர் போதும்

ஒரு வீரர் போதும்

ராகுல் டிராவிட் கூறுகையில், இந்திய அணியால் 20 விக்கெட்களையும் கைப்பற்ற முடியும். ஆனால், ஒரு பேட்ஸ்மேன் தொடரில் 500 ரன்களை எடுக்க வேண்டும். அதுதான் தொடரை தீர்மானிக்கும் என்றார். அதே சமயம், ஸ்மித் அல்லது வார்னர் அந்த ரன்களை எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

ஆஸி. நிலை

ஆஸி. நிலை

ஆஸ்திரேலிய அணியில் முதல் டெஸ்டில் டேவிட் வார்னர் காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என தெரிய வந்துள்ளது சில பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகலாம் என்பதால் இந்திய அணிக்கு இணையாகவே ஆஸ்திரேலிய அணியும் உள்ளது.

Story first published: Friday, December 11, 2020, 19:42 [IST]
Other articles published on Dec 11, 2020
English summary
IND vs AUS : Anil Kumble, Rahul Dravid have their say on India’s chances against Australia in test match series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X