For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த அஸ்வின்.. அதுவும் இப்படியா? வாயை பிளக்க வைத்த சாதனை!!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்திய அஸ்வின் சாதனைப் பட்டியலில் ஜாம்பவான் ஒருவரை முந்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கோலி 74, புஜாரா 43, ரஹானே 42 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் எடுத்தது. இது குறைந்த ஸ்கோர் என கருதப்பட்டாலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.

திருப்புமுனை

திருப்புமுனை

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 26 ஓவர்கள் பந்து வீசினர். பும்ரா துவக்க வீரர்கள் விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். அப்போது அஸ்வின் திருப்புமுனை ஏற்படுத்தினார்.

4 விக்கெட்கள்

4 விக்கெட்கள்

ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் என ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரை வீழ்த்தினார் அஸ்வின். பின் நாதன் லியோன் விக்கெட்டையும் வீழ்த்தி 4 விக்கெட்களை அள்ளினார். 18 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

கபில் தேவ்வை முந்தினார்

கபில் தேவ்வை முந்தினார்

இந்த விக்கெட்கள் மூலம் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 81 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் சாதனைப் பட்டியலில் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் கபில் தேவ்வை முந்தி உள்ளார் அஸ்வின்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் கபில் தேவ்வை முந்தி மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கபில் தேவ் 20 டெஸ்ட் போட்டிகளில் 79 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

முதல் இரண்டு இடங்கள்

முதல் இரண்டு இடங்கள்

அதை முறியடித்துள்ள அஸ்வின் 16 போட்டிகளில் 81 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதே பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளனர். அனில் கும்ப்ளே 20 டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஹர்பஜன் சிங் 18 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டி உள்ளார். அஸ்வின், இன்னும் ஒரீரு ஆண்டுகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Saturday, December 19, 2020, 10:54 [IST]
Other articles published on Dec 19, 2020
English summary
IND vs AUS : Ashwin breaks Kapil Dev record of most wickets against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X