For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏளனமாக நினைத்த ஆஸி. வீரர்கள்.. எதிர்பார்க்காத கேப்டன்.. மொத்தமாக அரண்டு போக வைத்த அஸ்வின்!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றி மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் அதை உடைத்தார்.

விக்கெட் வேட்டை நடத்தி தன் பந்துவீச்சில் ரன் அடிக்கலாம் என தன்னை ஏளனமாக நினைத்த ஆஸ்திரேலிய வீரர்களை ஓட விட்டார்.

இந்த தடையால உலக அளவுல பௌலர்கள் எல்லாருமே கஷ்டப்படறாங்க.. சரியாகறதுக்காக காத்திருக்காங்க! இந்த தடையால உலக அளவுல பௌலர்கள் எல்லாருமே கஷ்டப்படறாங்க.. சரியாகறதுக்காக காத்திருக்காங்க!

கேப்டன் விராட் கோலி கூட அஸ்வின் மீது அதிக நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், அவர் முக்கிய விக்கெட்களை வீழ்த்தியதை கண்டு அவர் ஆச்சரியம் அடைந்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி ஆடியது. அந்த அணி வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதான ஆட்டம் ஆடியது. துவக்க வீரர்கள் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் பும்ரா பந்துவீச்சில் வீழ்ந்தனர்.

விக்கெட் வேண்டும்

விக்கெட் வேண்டும்

அடுத்ததாக லாபுஷாக்னே விரைவாக ரன் குவிக்கத் துவங்கினார். அப்போது விரைவில் விக்கெட் வீழ்த்தினால் ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் சிக்க வைக்கலாம் என திட்டமிட்ட கோலி பந்துவீச்சாளர்களை மாற்றி வந்தார்.

முதல் ஓவரில்..

முதல் ஓவரில்..

இன்னிங்க்ஸின் 27வது ஓவரில் தான் அஸ்வினுக்கு முதல் ஓவர் வீச வாய்ப்பு கிடைத்தது. அஸ்வின் தன் முதல் ஓவரின் கடைசி பந்தில் முக்கிய விக்கெட்டான ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது கோழி வியப்படைந்தார்.

குறைத்து மதிப்பிட்டனர்

குறைத்து மதிப்பிட்டனர்

வேகப் பந்துவீச்சாளர்களை கண்டு தான் ஆஸ்திரேலிய வீரர்கள் அஞ்சினர். ஆனால், அஸ்வினின் சுழற் பந்துவீச்சை குறைத்து மதிப்பிட்டு அடித்து ஆட முயன்றனர். அதன் பலனாக அவருக்கு விக்கெட்கள் கிடைத்து வந்தது. அஸ்வின் தன் அனுபவத்தை வைத்து ஆஸ்திரேலிய அணியை மிரட்டினார்.

மிடில் ஆர்டர் காலி

மிடில் ஆர்டர் காலி

ஸ்டீவ் ஸ்மித்தை தொடர்ந்து டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் என வரிசையாக மிடில் ஆர்டரை காலி செய்தார் அஸ்வின். இறுதியில் நாதன் லியோன் விக்கெட்டையும் வீழ்த்தி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

மாற்றிய அஸ்வின்

மாற்றிய அஸ்வின்

பும்ரா 2, உமேஷ் யாதவ் 3, அஸ்வின் 4 விக்கெட்களை கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணியை தன் சுழற் பந்துவீச்சின் மூலம் அஸ்வின் மிரட்டி உள்ளார். இந்தப் போட்டிக்கு முன் வரை யாருமே அவரது பந்துவீச்சை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. தற்போது அதை ஒரே இன்னிங்க்ஸில் மாற்றி இருக்கிறார் அஸ்வின்.

Story first published: Friday, December 18, 2020, 19:07 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
IND vs AUS : Ashwin took 4 wickets with his brilliant bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X