அவங்க 2 பேரும் இல்லாம ஆஸி.வை ஜெயிக்க முடியாது.. இப்ப என்ன பண்றது? செம சிக்கலில் கோலி!

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்குவது இன்னும் உறுதியாகவில்லை.

துவக்க வீரர்களான இருவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்ய முடியாத அளவுக்கு காயம் அடைந்தனர்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்!

மருத்துவக் குழு சோதனை

மருத்துவக் குழு சோதனை

அவர்களால் மூன்றாவது போட்டியில் ஆட முடியுமா? என மருத்துவக் குழு பரிசோதித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. போட்டி அன்று காலையில் தான் முடிவு தெரியும் என கூறப்படுகிறது.

ரோஹித் காயம்

ரோஹித் காயம்

ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் 43வது ஓவரில் பீல்டிங் செய்த போது கீழே விழுந்தார். அப்போது அவரது இடது கை தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

காயம்

காயம்

ஷிகர் தவான் பேட்டிங் செய்த போது உடலில் பந்தால் தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர் இந்திய அணியின் பந்துவீச்சின் போது முழுவதுமாக பீல்டிங் செய்ய வரவில்லை.

உறுதியாகவில்லை

உறுதியாகவில்லை

மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. அந்தப் போட்டியில் முக்கிய வீரர்கள் ரோஹித் சர்மா, தவான் ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

ரோஹித் சர்மா, ஷிகர் தவான் என்ற இரு மூத்த வீரர்களும் ஒரே நேரத்தில் அணியில் ஆடாவிட்டால் அது பெரும் பின்னடைவாக அமையும். பேட்டிங்கில் கோலி தவிர்த்து, அவர்கள் இருவரும் தான் அதிக அனுபவம் கொண்ட வீரர்கள்.

துவக்க வீரர் சிக்கல்

துவக்க வீரர் சிக்கல்

மேலும், பேட்டிங் வரிசையில் இவர்கள் இருவரைத் தவிர ராகுல் மட்டுமே துவக்க வீரராக அணியில் இருக்கிறார். எனவே, மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், தவான் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால் மற்றொரு துவக்க வீரரை கேப்டன் கோலி அடையாளம் காண வேண்டும்.

மாற்று வீரர்கள் யார்?

மாற்று வீரர்கள் யார்?

ஏற்கனவே, ரிஷப் பண்ட் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ரோஹித்தும், தவானும் ஆடாவிட்டால், மாற்று வீரர்களான கேதார் ஜாதவ் மற்றும் சிவம் துபேவை வைத்து தான் இந்திய அணி சமாளிக்க வேண்டும்.

பேட்டிங் வரிசை தலைவலி

பேட்டிங் வரிசை தலைவலி

ஜாதவ், சிவம் துபே இருவருமே மிடில் ஆர்டரில் தான் ஆடுவார்கள். ஏற்கனவே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே மிடில் ஆர்டரில் ஆடி வருகின்றனர். எனவே, மொத்த பேட்டிங் வரிசையையும் சீரமைக்க வேண்டும். இது கேப்டன் கோலிக்கு பெரிய தலைவலியாக இருக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் பலம்

ஆஸ்திரேலிய அணியின் பலம்

ஆஸ்திரேலிய அணி பலமான அணியாக உள்ளது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி, இரண்டாவது போட்டியில் கடைசி வரை போராடி 36 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது.

IND vs AUS 3rd ODI | India won the series | ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
சமபலம் வேண்டும்

சமபலம் வேண்டும்

எனவே, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த ரோஹித் சர்மா, தவான் இருவரில் ஒருவராவது அணியில் இருக்க வேண்டும். அப்போது மற்றொரு துவக்க வீரராக ராகுலை ஆடவைத்து இந்திய அணி சமபலத்துடன் மோத முடியும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs AUS : Both Dhawan and Rohit Sharma injured and under scanner ahead of 3rd ODI
Story first published: Saturday, January 18, 2020, 18:07 [IST]
Other articles published on Jan 18, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X