For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எச்சரித்தது போல நடக்கிறது.. மொத்தமாக மாறிய சூழ்நிலை.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சிக்கல்!

சிட்னி: இந்தியா ஆஸ்திரேலுமா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்போன் மைதானம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைய தொடங்கி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி தற்போது 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது.

வாய்ப்பை தவறவிட்ட ஏடிகே மோகன் பகான்.. சுதாரித்த கோவா.. பரபர கால்பந்து போட்டி!வாய்ப்பை தவறவிட்ட ஏடிகே மோகன் பகான்.. சுதாரித்த கோவா.. பரபர கால்பந்து போட்டி!

இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி 260 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மாறுதல்

மாறுதல்

இன்று காலையில் வார்னர் மற்றும் மார்கஸ் பேட்டிங் இறங்கிய போது பிட்ச் பேட்டிங் செய்த வசதியாக இருந்தது. ஆனால் போக போக பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக மாறியது.

 பிட்ச்

பிட்ச்

முக்கியமாக பிட்ச் அதிகமாக ஸ்விங் ஆக தொடங்கியது.கணிக்க முடியாத அளவிற்கு பிட்ச் பவுன்சர் ஆக தொடங்கியது. இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத வகையில் இன்று வெயில் அடித்தது. இதனால் பிட்ச் வறட்சி அடைந்தது.

ஸ்விங்

ஸ்விங்

இதன் காரணமாக பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்விங் ஆக தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு பின் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாத அளவிற்கு பிட்ச் மாறியது. நடராஜன், ஷரத்துல் என்று இந்திய பவுலர்கள் வீசிய எல்லா பந்தும் பவுன்ஸ் ஆனதோடு ஸ்விங்கும் ஆனது.

விக்கெட்

விக்கெட்

இதனால் வரிசையாக ஸ்மித், கிரீன் போன்ற முக்கியமான வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். இதை பயன்படுத்தி சிராஜ், ஷரத்துல் அடுத்தடுத்து பவுன்சர்களை வீசி விக்கெட் எடுக்க தொடங்கினார்கள். இது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்கு எதிராக மாறும் வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட் விமர்சகர்கள் இதை முன்பே எச்சரித்து இருந்தனர்.

மோசமாகும்

மோசமாகும்

நாளை நடக்கும் ஆட்டத்தில் பிட்ச் மேலும் மாற்றம் அடையும். இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் கடுமையான பவுலிங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆஸ்திரேலியாவின் ஸ்விங், பவுன்சர் பவுலிங்கை நாளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Story first published: Monday, January 18, 2021, 10:19 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
Ind vs Aus: Brisbane pitch changed a lot in the fourth day of the final test due to unexpected weather.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X