For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன்தான்.. ஸ்டீவ் ஸ்மித்துக்கு கை கொடுத்த விராட் கோலி. நெகிழ வைத்த சம்பவம்!

Recommended Video

World Cup 2019-கோஷம் போட்ட ரசிகர்கள் ... ஸ்டீவ் ஸ்மித்துக்கு கை கொடுத்த விராட் கோலி

லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி எதிரணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக நடந்து கொண்ட சம்பவம் நெகிழ வைப்பதாக இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி பரபரப்பின் உச்சத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் வீரர்களின் ஆட்டத்தை காட்டிலும் சுவாரசியமாக அமைந்தது.

ஆஸி. சீண்டல்

ஆஸி. சீண்டல்

இந்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 352 ரன்கள் குவித்தது. இந்த போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டி அளித்த போது, ஸ்டீவ் ஸ்மித் தான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி விராட் கோலியை சீண்டி விட்டார்.

கோலி பதிலடி

கோலி பதிலடி

விராட் கோலி தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என கூறப்பட்டு வரும் நிலையில், அதை நேரடியாக தாக்கி பேசி இருந்தார் ஆரோன் பின்ச். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி இந்தப் போட்டியில் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஏமாற்றுக்காரர் கோஷம்

விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது, ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி எல்லை அருகே நிற்க வைக்கப்பட்டார். அப்போது சில ரசிகர்கள் "சீட்டர், சீட்டர்" என கோஷம் போட்டு ஸ்டீவ் ஸ்மித்தை பந்து சேத விவகாரத்தை வைத்து ஏமாற்றுக்காரர் என கிண்டல் செய்தனர்.

கோலி கண்டிப்பு

கோலி கண்டிப்பு

ஆனால், அப்போது விராட் கோலி ரசிகர்களை கண்டிக்கும் வகையில், ஏன் ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்கிறீர்கள்? அதற்கு பதிலாக எனக்கு உற்சாகம் அளியுங்கள்" என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சைகை செய்தார்.

வரவேற்பு

வரவேற்பு

ஆரோன் பின்ச் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஸ்டீவ் ஸ்மித்தை போட்டிக்காரர் என பார்க்காமல், விராட் கோலி செய்த இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தும் கோலி செய்த செயலை பாராட்டி, ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் முதுகில் தட்டிச் சென்றார்.

செய்யாமல் இருப்பார்களா?

செய்யாமல் இருப்பார்களா?

பெரிய மனுஷன்.. பெரிய மனிஷன் தான்யா என பலரும் கோலியை பாராட்டி வருகின்றனர். இனியாவது ஆஸ்திரேலிய வீரர்கள் போட்டிக்கு முன்னும், போட்டியிலும் தேவயில்லாமல் மற்ற வீரர்களை சீண்டாமல் இருந்தால் சரிதான்.

Story first published: Sunday, June 9, 2019, 23:18 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
IND vs AUS Cricket World cup 2019 : Virat Kohli stop fans from abusing Steve Smith
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X