For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னய்யா! பசையை வச்சு ஒட்டுனா மாதிரி இருக்கு.. இது கள்ள ஆட்டம்.. தப்பிய வார்னர்.. பொங்கிய ரசிகர்கள்!

லண்டன் : இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் துவக்கத்திலேயே பவுல்ட் அவுட் ஆகாமல் தப்பித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 352 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 117, கோலி 82, ரோஹித் 57, ஹர்திக் பண்டியா 48 என இந்திய பேட்ஸ்மேன்கள் கலக்கலாக பேட்டிங் செய்தனர்.

அடுத்து ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் பந்து

முதல் பந்து

2வது ஓவரின் முதல் பந்தை வீசினார் பும்ரா. பந்து ஸ்டம்ப்புகளில் எல்லோராலும் பார்க்கும்படி மோதியது. ஆனால், பெயில்ஸ் கீழே விழவில்லை. இதைக் கண்டு இந்திய அணி மட்டுமல்லாது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

வார்னர் அரைசதம்

வார்னர் அரைசதம்

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட டேவிட் வார்னர் அரைசதம் கடந்து, 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சமீப காலமாக, பந்து ஸ்டம்ப்புகளில் பட்டாலும், பெயில்ஸ் கீழே விழாமல் இருக்கும் சம்பவங்கள் சர்வதேச புகார் கிரிக்கெட்டில் அதிகரித்து வருகிறது.

புகார் இல்லை

புகார் இல்லை

இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் 14 போட்டிகளில் 5 முறை பெயில்ஸ் கீழே விழாமல் ஏமாற்றி உள்ளது. இதுவரை எந்த அணியும் இது குறித்து புகார் தரவில்லை. காரணம், இது அனைத்து அணிகளுக்கும் சமமான நிலைமை என்பதாலும், பேட்ஸ்மேனுக்கு சாதகமான நிலையை இது அளிக்கிறது என்பதாலும், அனைவரும் அமைதியாக உள்ளனர்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆனால், ரசிகர்கள் இதைக் கண்டு பொங்கி வருகிறார்கள். இதுவரை இந்த பெயில்ஸ் பிரச்சனை இந்திய அணிக்கு ஏற்படாமல் இருந்தது. தற்போது இந்திய அணிக்கு சிக்கல் என்றதும், இந்திய ரசிகர்கள் பொங்கி விட்டார்கள். உடனே இந்த பெயில்சை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

ஏன் கீழே விழவில்லை?

ஏன் கீழே விழவில்லை?

சிலர் இந்த பெயில்ஸ் பெவிகால் போட்டு ஒட்டியுள்ளது என்றும் கூறுகிறார்கள். உண்மையில், ஏன் இப்படி பெயில்ஸ் கீழே விழாமல் இருக்கிறது? அதற்கு காரணம், ஸ்டம்பு மற்றும் பெயில்ஸ் ஆகியவை நவீனமாக மாற்றப்பட்டு இருப்பது தான்.

காரணம்

காரணம்

மைக், கேமரா, பெயில்ஸ்-இல் லைட் என் பல நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டம்புகளால், பெயில்ஸ் எடை கூடியுள்ளது., இதுதான் பந்து ஸ்டம்ப்பில் உரசினாலும் கூட பெயில்சை கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறது. இதை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. இல்லாவிட்டால், கிரிக்கெட் விளையாட்டு கேலிக் கூத்தாக மாறிவிடும்.

Story first published: Sunday, June 9, 2019, 23:03 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
IND vs AUS Cricket World cup 2019 : Zing bails failed for the fifth time in world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X