For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் விக்கெட்டை எடுத்தா போதும்.. இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பின்னிய வலை.. அந்த வீரருக்கு வைத்த குறி!

பிரிஸ்பேன் : இந்திய டெஸ்ட் அணி வீரரான புஜாராவுக்கு எதிராக திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

2018-19 டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2 - 1 என வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அந்த வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர் புஜாரா.

3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்! 3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!

அவர் 1000 பந்துகளுக்கும் மேல் சந்தித்து 521 ரன்கள் குவித்து இருந்தார். அவர் தான் இரு அணிகளுக்கும் இடையே இருந்த ஒரே வித்தியாசம்.

திட்டம்

திட்டம்

இதை நன்கு உணர்ந்து இருந்தது ஆஸ்திரேலிய அணி. குறிப்பாக அனுபவ வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைமையில் வேகப் பந்துவீச்சாளர்கள் புஜாரா விக்கெட்டை நடப்பு டெஸ்ட் தொடரில் வீழ்த்த தனியாக திட்டமிட்டனர்.

எளிதாக வீழ்த்த முடியாது.

எளிதாக வீழ்த்த முடியாது.

புஜாரா தடுப்பாட்டம் ஆடுபவர் என்பதால் அவரை எளிதாக வீழ்த்த முடியாது. எனவே, மிக மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் மட்டுமே அவரை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து அவருக்கு எதிராக கடினமான பந்துவீச்சு ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டனர்.

என்ன செய்தார் கம்மின்ஸ்?

என்ன செய்தார் கம்மின்ஸ்?

அதன்படி, ஆஃப்சைடு ஸ்டம்ப்புக்கு நேராக மிதமான பவுன்ஸ் ஆகும் வகையில் பந்துவீசி வந்தார் பாட் கம்மின்ஸ். இதே திட்டத்தை ஹேசல்வுட்டும் பின்பற்றினார். தொடர்ந்து இதே போல பந்து வீசினால், எந்த பேட்ஸ்மேனும் பந்தை அடிக்க முடியாமல் எட்ஜ் கொடுத்து அவுட் ஆகி விடுவார்கள்.

பலன் கிடைத்தது

பலன் கிடைத்தது

அதே சமயம், இப்படி தொடர்ந்து பந்து வீசுவதும் மிகக் கடினம். அந்த கடினமான காரியத்தை செய்தது ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சு கூட்டணி. அதற்கான பலனாக இந்த தொடரில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் புஜாராவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போனது.

விமர்சனம்

விமர்சனம்

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 7 இன்னிங்க்ஸ்களில் 215 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரை சிலர் விமர்சனம் செய்தாலும் அவர் கடினமான பந்துவீச்சுக்கு எதிராகவே விக்கெட்டை பறி கொடுத்துள்ளார் என்பதே உண்மை. கம்மின்ஸ் பந்துவீச்சில் 4 முறையும், ஹேசல்வுட் பந்துவீச்சில் 2 முறையும் வீழ்ந்துள்ளார்.

Story first published: Sunday, January 17, 2021, 15:13 [IST]
Other articles published on Jan 17, 2021
English summary
IND vs AUS : Pat Cummins plan to Pujara has worked very well
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X