For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு இவ்வளவு சீனா.. பாதி பிட்னசோடு களமிறங்கிய வீரர்.. 10 நிமிடத்தில் காலி செய்த இந்திய பவுலர்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வார்னர் வெறும் 8 பந்துகள் பிடித்த நிலையில் அவுட்டானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

David Warner-ஐ 10 நிமிடத்தில் காலி செய்த இந்திய பவுலர் | Oneindia Tamil

ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது நடைபெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழை காரணமாக தடைபட்டு உள்ளது.

இந்திய அணியில் தற்போது ரோஹித் சர்மா இணைந்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், சைனி ஆகியோர் ஆடுகிறார்கள்.

டாஸ்

டாஸ்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் களமிறங்கி இருந்தார். ஓப்பனிங் வீரர் ஜோ பர்ன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு வார்னர் களமிறங்கினார்.

வார்னர்

வார்னர்

நீண்ட நாட்களுக்கு பின் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறார். அதேபோல் இவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். காயத்திற்கு பின் களத்திற்கு இவர் திரும்பி வந்துள்ளார். ஆனால் இவர் முழு பிட்னசோடு இல்லை. 70% பிடனசோடு இவர் களத்திற்கு வந்தார்.

மோசம்

மோசம்

ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் மோசமாக இருக்கிறது என்று இவர் களமிறக்கப்பட்டார். வார்னர் வந்துவிட்டார், இனி இந்திய பவுலர்கள் ஆட்டம் காட்ட முடியாது. ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி விடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிட்டு வந்தனர். இவரின் கம்பேக் குறித்து பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் வார்னர் இன்று எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. ஆஸ்திரேலிய பேட்டிங் இறங்கி தொடக்கத்திலேயே திணற தொடங்கியது. அதிகம் எதிர்பார்த்த வார்னர் வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பவுலிங்கில் அவுட் ஆனார்.

மோசமான அவுட்

மோசமான அவுட்

வெறும் 8 பந்துகள் பிடித்த நிலையில் வார்னர் அவுட் ஆனார். இவர் 10 நிமிடம் மட்டுமே களத்தில் இருந்தார். அதிலும் மோசமாக திணறிய வாட்சன் சிராஜ் பவுலிங்கில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

Story first published: Thursday, January 7, 2021, 9:14 [IST]
Other articles published on Jan 7, 2021
English summary
Ind vs Aus: David Warner didn't give a good come back against India in 3rd test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X