தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!

மும்பை : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக இருந்த ஆறு இளம் வீரர்களில் ஒருவருக்கு மட்டுமே அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

மற்ற ஐந்து வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என ஒரு தகவல் இந்திய அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

அறிமுக வீரர்கள்

அறிமுக வீரர்கள்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஐந்து இளம் வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். மூத்த வீரர்கள் காயத்தில் சிக்கவே, இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2018இல் ஒரு டெஸ்ட் போட்டியில் பத்து பந்துகள் மட்டுமே வீசி காயமடைந்த ஷர்துல் தாக்குரும் அறிமுக வீரர் என எடுத்துக் கொண்டால் ஆறு இளம் வீரர்கள் இந்திய அணியும் வெற்றியில் பங்கு வகித்தனர்.

நடராஜன் இல்லை

நடராஜன் இல்லை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், பிப்ரவரி மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் நடராஜன், நவ்தீப் சைனி பெயர்கள் இடம் பெறவில்லை.

இடம் கிடைக்குமா?

இடம் கிடைக்குமா?

நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. சைனி இனி டெஸ்ட் அணியில் இடம் பெறுவது சந்தேகமே. பும்ரா, இஷாந்த் சர்மா அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், முகமது சிராஜ், ஷர்துல் தாக்குருக்கு போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுந்தர் நிலை

சுந்தர் நிலை

ஜடேஜா காயத்தில் இருப்பதால் வாய்ப்பு பெற்ற வாஷிங்க்டன் சுந்தர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் இடம் பெற்று இருந்தாலும், அக்சர் பட்டேலை அணியில் சேர்த்ததன் மூலம் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. பேட்ஸ்மேன் ஆன ஷுப்மன் கில் மட்டுமே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன வீரர்களில் மீண்டும் வாய்ப்பு பெறுவார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Debutants in Australian tour may never get a chance in England tour
Story first published: Saturday, January 23, 2021, 22:21 [IST]
Other articles published on Jan 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X