For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?

பிரிஸ்பேன் : விராட் கோலி இல்லாத இந்திய அணியை எளிதாக வீழ்த்தலாம் என எண்ணியது ஆஸ்திரேலியா.

ஆனால், ஏழுக்கும் மேற்பட்ட டெஸ்ட் அணி வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணியை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது அந்த அணி.

ஷர்துல் தாக்கூர் சிறப்பு... முகமது சிராஜ் சூப்பர்... பாராட்டிய முன்னாள் வீரர் ஷர்துல் தாக்கூர் சிறப்பு... முகமது சிராஜ் சூப்பர்... பாராட்டிய முன்னாள் வீரர்

அந்த விரக்தியில் நடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சந்தேகம் எழுப்பி இருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே. அதாவது ஸ்பாட் பிக்ஸிங் நடந்து இருக்கலாம் என்கிற ரீதியில் பேசி இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதுவே அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி. அதிக முதல் தர போட்டி அனுபவம் இல்லாத நடராஜன் இந்தப் போட்டியில் எட்டு நோ பால்கள் வீசினார்.

ஷேன் வார்னே சொன்ன புகார்

ஷேன் வார்னே சொன்ன புகார்

அதை சுட்டிக் காட்டிய ஷேன் வார்னே, நடராஜன் ஐந்து நாள் பால்களை ஓவரின் முதல் பந்தில் வீசியதாகவும், அதுவும் பெரிய நோ பால்களாக அவை இருந்தது எனவும் கூறி இதில் ஸ்பாட் பிக்ஸிங் நடந்து இருக்கலாம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

விரக்தி

விரக்தி

இது ஆஸ்திரேலியாவின் விரக்தியின் வெளிப்பாடே. முதல் டெஸ்டில் பெரிய வெற்றி பெற்ற பின், விராட் கோலி இல்லாத இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. அடுத்து மூன்றாவது டெஸ்டில் கைக்கு கிடைத்த வெற்றியை நழுவ விட்டது ஆஸ்திரேலியா. இந்தியா டிரா செய்தது.

கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.

கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.

அடுத்து நான்காவது டெஸ்டில் அனுபவ டெஸ்ட் வீரர்கள் இன்றி இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்தப் போட்டியும் டிராவை நோக்கி நகர்கிறது. இந்த நிலையில், இந்திய அணி மீது அவதூறை பரப்பும் வகையில் செயல்படத் துவங்கி உள்ளது ஆஸ்திரேலியா.

கங்குலி என்ன செய்யப் போகிறார்?

கங்குலி என்ன செய்யப் போகிறார்?

அதன் ஒரு பகுதியாகவே ஷேன் வார்னே, நடராஜன் மீது புகார் கூறி இருக்கிறார். முன்னதாக இந்திய வீரர்கள் பயோ பபுள் விதிகளை பின்பற்றவில்லை என சர்ச்சைகளை கிளப்பிய ஆஸி. எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி, இதற்கு கடும் எதிர்வினை ஆற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

Story first published: Monday, January 18, 2021, 18:28 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
IND vs AUS : Sourav Ganguly should take action after Warne accused Natarajan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X