For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு நியாய தர்மம் வேண்டாமா? நொந்து போன இந்திய வீரர்.. குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அவரது ஆட்டத்தை கண்டு கிரிக்கெட் உலகமே ஒரு நிமிடம் திகைத்தது. சில நாட்கள் முன்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்று ரன் குவிக்க முடியாமல் திணறினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்காக 19 பந்துகளில் 45 ரன்கள் வெளுத்தார். அதுவும் தன் ஐபிஎல் அணி கேப்டன் கண் முன்னேயே இந்த சம்பவத்தை செய்தார். அதை வைத்து தான் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அப்போது மேக்ஸ்வெல் தான் மன்னிப்பு கேட்டதாக கூறினார்.

108 ரன்கள்

108 ரன்கள்

கிளென் மேக்ஸ்வெல் 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினார். அந்த அணி அவரை 10.75 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஆனால், அத்தனை விலை கொடுத்து வாங்கப்பட்ட மேக்ஸ்வெல் 13 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அதிரடி ஆல்-ரவுண்டரான அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. அதனால் அவர் கடும் விமர்சனத்தை சந்தித்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியில் கூட அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டு முதல் போட்டியில் பங்கேற்றார்.

அதிரடி

அதிரடி

முதல் போட்டியில் வார்னர் 69, ஆரோன் பின்ச் 114, ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 105 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெல் தன் பங்குக்கு 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து தெறிக்க விட்டார் அவர்.

கிண்டல்

கிண்டல்

பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். தன் ஐபிஎல் கேப்டன் கண் முன்னேயே மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடி ஆட்டம் ஆடினார். அதைக் கண்ட ரசிகர்கள், ராகுல் தற்போது நொந்து போய் இருப்பதாக கிண்டல் செய்தனர்.

ஜேம்ஸ் நீஷம்

ஜேம்ஸ் நீஷம்

மறுபுறம் நியூசிலாந்து - வெ.இண்டீஸ் இடையே ஆன டி20 போட்டியில் மற்றொரு பஞ்சாப் அணி வீரரான ஜேம்ஸ் நீஷம் 24 பந்துகளில் 48 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். இவர்கள் இருவரையும் ராகுல் முறைத்துப் பார்ப்பது போல ஒருவர் மீம் போட்டு இருந்தார்.

மன்னிப்பு

மன்னிப்பு

அதை நீஷம், மேக்ஸ்வெல் உடன் பகிர்ந்து இருந்தார். மேக்ஸ்வெல் அதற்கு பதிவிட்ட கமெண்ட்டில் தான் அதிரடி ஆட்டம் ஆடிய போது ராகுலிடம் மன்னிப்பு கேட்டதாக கூறி உள்ளார். அவரது பதிவும் வைரல் ஆகி வருகிறது.

Story first published: Saturday, November 28, 2020, 14:51 [IST]
Other articles published on Nov 28, 2020
English summary
IND vs AUS : Glenn Maxwell apology to KL Rahul for playing well against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X