For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 கோடியை காலி செய்த அம்பியா இது? அந்நியன் அவதாரம் எடுத்த ஆஸி. வீரர்.. அரண்டு போன கோலி

சிட்னி : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்.

ஆல் - ரவுண்டரான அவர் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு இருந்தார்.

ஆனால், தன் நாட்டுக்காக ஆடும் போது அந்நியன் அவதாரம் எடுத்தது போல அதிரடியில் வெளுத்தார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் அபார துவக்கம் அளித்தனர். வார்னர் 69 ரன்கள் குவித்தார்.

ஆரோன் பின்ச்

ஆரோன் பின்ச்

ஆரோன் பின்ச் சதம் கடந்து 114 ரன்கள் குவித்தார். பின்ச்சும் ஐபிஎல் தொடரில் சுமாராகவே ஆடி இருந்தார். ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் அவர் அபாரமாக ஆடி 114 ரன்கள் வரை எடுத்து மிரட்டினார்.

ஸ்மித் சதம்

ஸ்மித் சதம்

அவருக்கு அடுத்ததாக ஸ்டீவ் ஸ்மித்தும் அபார ஆட்டம் ஆடினார். அவர் 66 பந்துகளில் 105 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை திணற வைத்தார். ஆஸ்திரேலிய அணி அப்போது விரைவாக ரன் ரேட்டை உயர்த்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை அனுப்பி வைத்தது.

தெறிக்கவிட்ட ஆட்டம்

தெறிக்கவிட்ட ஆட்டம்

அவர் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். சாஹல் பந்துவீச்சில் சுவிட்ச் ஹிட் அடித்து தெறிக்க விட்டு தன் அதிரடியை துவக்கிய அவர் 5 ஃபோர், 3 சிக்ஸ் விளாசினார். 45 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 236 ஆகும்.

அந்நியன்

அந்நியன்

மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. 10 கோடி கொடுத்து அவரை வாங்கிய பஞ்சாப் அணி, அதற்கு அவர் எந்த பலனும் அளிக்காமல் சொதப்பியதால் அவரை விடுவிப்பது குறித்து சிந்தித்து வருவதாகக் கூட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அவர் நாட்டுக்காக ஆடும் போது அந்நியன் போல ஒரே போட்டியில் மிரட்டினார்.

108 ரன்கள்

108 ரன்கள்

2020 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் மேக்ஸ்வெல். 9 ஃபோர் மட்டுமே அடித்து இருந்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. ஒரு போட்டியில் அவர் எடுத்த அதிகபட்ச ரன் 32 ரன் மட்டுமே.

சேவாக் கிண்டல்

சேவாக் கிண்டல்

ஐபிஎல் தொடரில் அம்பி போல ஆடிய மேக்ஸ்வெல்லை 10 கோடி சியர்லீடர் என வீரேந்தர் சேவாக் கிண்டல் செய்து இருந்தார். அதற்கு சேர்த்து வைத்து பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் மேக்ஸ்வெல். இந்த தொடரில் அவர் இதே போன்ற ஆட்டத்தை ஆடினால் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Friday, November 27, 2020, 16:31 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
IND vs AUS : Glenn Maxwell scored a quickfire 45 runs after a huge failure in IPL with just 108 runs from 13 matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X