For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. இந்திய அணியால் ஆஸி.வுக்கு நேர்ந்த கதி!

லண்டன் : டெஸ்ட் தொடரில் முழு பலத்துடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது.

இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி இனி சிறந்த அணி இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் அதிரடியாக கூறி உள்ளார்.

மேலும், இங்கிலாந்து அணி இனியும் ஆஷஸ் தொடருக்காக மெனக்கெடுவதை விட்டு விட்டு, இந்திய அணியை, இந்திய மண்ணிலேயே வீழ்த்த திட்டமிட வேண்டும். அதுதான் பெரிய சாதனை என கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

சிறந்த டெஸ்ட் அணிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எப்போதும் இடம் உண்டு. ஆனால், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாத ஓராண்டு மட்டும் அந்த அணி மோசமான நிலையில் இருந்தது, அவர்களின் வரவுக்கு பின் ஆஷஸ் தொடரை தக்க வைத்தது முதல் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்த நிலையில், வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உலகின் சிறந்த பந்துவீச்சு தாக்குதலை கொண்டு இருந்தும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணிலேயே வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2 - 1 என கைப்பற்றியது. இத்தனைக்கும் அனுபவ வீரர்கள் பலர் காயத்தால் முழு தொடரிலும் பங்கேற்கவில்லை.

சிறந்த அணி இல்லை

சிறந்த அணி இல்லை

அடுத்ததாக இந்தியா, இங்கிலாந்து அணியை இந்திய மண்ணில் சந்திக்க உள்ளது. இந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான், இனி ஆஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் தொடர் முக்கியம் என இங்கிலாந்து அணி நினைக்க வேண்டியதில்லை. ஆஸ்திரேலியா இனியும் சிறந்த அணி இல்லை என கூறி உள்ளார்.

இந்தியாவை வீழ்த்த வேண்டும்

இந்தியாவை வீழ்த்த வேண்டும்

ஆஸ்திரேலியாவை விட்டுவிட்டு இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்த இங்கிலாந்து அணி முயற்சி செய்ய வேண்டும். அதுதான் பெரிய சாதனை என ஸ்வான் கூறி உள்ளார். இந்திய அணிக்கு எதிரான தோல்வியால் ஆஸ்திரேலியாவின் மதிப்பு கிரிக்கெட் உலகில் பெருமளவில் சரிந்துள்ளது.

Story first published: Friday, January 22, 2021, 18:40 [IST]
Other articles published on Jan 22, 2021
English summary
IND vs AUS : Graeme Swann says Australia is not best team anymore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X