For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு அப்புறம் இவர்தான்.. கிரிக்கெட் உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார்.. புகழின் உச்சியில் இளம் வீரர்!

சிட்னி : இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அசத்தலாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா தான்.

அவரது பினிஷிங் திறமையை கண்ட பலரும் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர். அவர் தோனி, விராட் கோலிக்கு பின் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக மாறுவார் எனவும் பாராட்டை பெற்றுள்ளார்.

வொண்டர் பேட்.. பாண்டியா கொண்டு வந்த புதிய அஸ்திரம்.. நேற்று ஆட்டத்திற்கு பின் இப்படி ஒரு பின்னணியா?வொண்டர் பேட்.. பாண்டியா கொண்டு வந்த புதிய அஸ்திரம்.. நேற்று ஆட்டத்திற்கு பின் இப்படி ஒரு பின்னணியா?

அந்த போட்டி

அந்த போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் குவித்தது. இந்த கடின இலக்கை இந்திய அணி துரத்தியது. தவான் 52, ராகுல் 30, கோலி 40 ரன்கள் குவித்தனர்.

இரண்டு சிக்ஸ்

இரண்டு சிக்ஸ்

கடைசி சில ஓவர்களில் பரபரப்பு நீடித்தது. 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து இருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் 90, 28, 92* ரன்கள் குவித்து இருந்தார். தொடர்ந்து பெரிய இன்னிங்க்ஸ் ஆடி அதிர வைத்தார்.

மைக்கேல் வாகன் புகழாரம்

மைக்கேல் வாகன் புகழாரம்

இந்த நிலையில் அவரைக் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் புகழ்ந்து இருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளது.

தோனி, கோலி

தோனி, கோலி

அந்த மூன்று தொடர்களில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடும் பட்சத்தில் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்வார் எனக் கூறினார். அந்த பதவியை தோனி பல ஆண்டுகளாக வைத்து இருந்தார். தற்போது விராட் கோலி வைத்துள்ளார்.

அடுத்த சூப்பர் ஸ்டார்

அடுத்த சூப்பர் ஸ்டார்

அதை இந்திய வீரர்கள் தான் எப்போதும் வைத்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்ததாக ஹர்திக் பாண்டியா அந்த அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் என்றார் மைக்கேல் வாகன். பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தை பலரும் தோனியுடன் ஒப்பிட்டு பேசி வரும் நிலையில் இதை அவர் கூறி உள்ளார்.

Story first published: Monday, December 7, 2020, 15:57 [IST]
Other articles published on Dec 7, 2020
English summary
IND vs AUS : Hardik Pandya could be next global superstar, after Dhoni and Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X