For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரண்டு ஆஸி பவுலர்களிடம் சரணடைந்த இந்திய பேட்டிங்.. பாண்டியா ஆறுதல்.. ஆஸி. அபார வெற்றி!

சிட்னி : இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 374 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே மோசமாக அமைந்தது.

இப்படி ஒரு காரணமா?.. ஐசிசி சொன்ன ரூல்.. பும்ரா முதல் சாஹல் வரை சொதப்பியது ஏன்.. பரபர பின்னணி!இப்படி ஒரு காரணமா?.. ஐசிசி சொன்ன ரூல்.. பும்ரா முதல் சாஹல் வரை சொதப்பியது ஏன்.. பரபர பின்னணி!

டாஸ் வென்ற ஆஸி

டாஸ் வென்ற ஆஸி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸில் வென்றது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றனர். கூடுதல் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை.

நிலையான துவக்கம்

நிலையான துவக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங்கில் வார்னர் - பின்ச் நிலையான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்தது. 27.5 ஓவர் வரை இந்த ஜோடியை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது இந்த கூட்டணி.

இரண்டு சதம்

இரண்டு சதம்

வார்னர் 69 ரன்கள் எடுத்தார். ஆரோன் பின்ச் நீண்ட நேரம் பேட்டிங் செய்து சதம் அடித்து, 114 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித்தும் அபாரமாக ஆடி சதம் கடந்தார். அவர் 105 ரன்கள் குவித்தார். இரண்டு சதங்கள் காரணமாக ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியில் 62 பந்துகளில் சதம் கடந்து மிரட்டினார். அவர் 11 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து தெறிக்கவிட்டார். மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணிக்கு ஷமி மட்டுமே பந்துவீச்சில் ஆறுதல் அளித்தார். அவர் 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா 73, சாஹல் 89, சைனி 83 ரன்கள் வாரி இறைத்தனர்.

4 விக்கெட்கள் இழப்பு

4 விக்கெட்கள் இழப்பு

அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. மயங்க் அகர்வால் 22, விராட் கோலி 21, ஸ்ரேயாஸ் ஐயர் 2, கேஎல் ராகுல் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தவான் - பாண்டியா போராட்டம்

தவான் - பாண்டியா போராட்டம்

தவான், ஹர்திக் பாண்டியா 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை மீட்க போராடினர். எனினும், ரன் ரேட் அழுத்தத்தை அவர்களால் குறைக்க முடியவில்லை. தவான் 86 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா ரன் குவிக்க திணறினார்.

90 ரன்கள்

90 ரன்கள்

ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். அத்துடன் இந்திய அணியின் கடைசி வெற்றி வாய்ப்பும் பறிபோனது. ஜடேஜா 37 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.

தோல்வி

தோல்வி

அடுத்து சைனி ரன் சேர்த்தாலும் அதில் எந்த பயனும் இல்லாமல் போனது. 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்களும், ஜாம்பா 4 விக்கெட்களும் வீழ்த்தினர், அவர்கள் இருவரது பந்துவீச்சில் இந்திய அணி சரணடைந்தது.

Story first published: Friday, November 27, 2020, 17:54 [IST]
Other articles published on Nov 27, 2020
English summary
IND vs AUS : Ind vs Aus first ODI result - Aus beat India by 66 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X