For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா இதை மட்டும் செஞ்சா போதும்.. இந்த மேட்ச்சும் போச்சு.. கதிகலங்கிய ஆஸி.!

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போலவே, நான்காவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆஸ்திரேலியா கை ஓங்கி உள்ளது.

ஆனாலும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது கடினம். இந்தியா போட்டியை டிரா செய்யவே வாய்ப்பு அதிகம்.

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 369 ரன்கள் குவித்தது. லாபுஷாக்னே சதம் அடித்து இருந்தார்.

இந்தியா அபாரம்

இந்தியா அபாரம்

அடுத்ததாக ஆடிய இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த போதும், 7வது விக்கெட்டுக்கு வாஷிங்க்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஜோடி சேர்ந்து 123 ரன்கள் சேர்த்தனர். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 336 ரன்கள் குவித்தது.

மழை

மழை

அடுத்து இந்திய அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க முடிவு செய்து ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்தது. இடையே மழை குறுக்கிட்டது. இதனால், மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் ஆட்டம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மழை பெய்யும்

மழை பெய்யும்

ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. இந்தியா நான்காம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் மழை பெய்யும். இந்திய அணியிடம் 10 விக்கெட்கள் உள்ளன.

டிரா ஆகும்

டிரா ஆகும்

மேலும், பாதி போட்டி மழையால் பாதிக்கப்படும் என்பதால் மீதமுள்ள ஓவர்களை ஆடி டிரா செய்ய இந்தியா திட்டமிடும். எனவே, ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் போலவே, நான்காவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை கோட்டை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 18, 2021, 16:11 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
IND vs AUS : India may draw the 5th test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X