For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்.. ரஹானே எடுத்த அந்த முடிவு!

பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே டெஸ்ட் தொடரில் இத்தனை வீரர்கள் ஆடியதில்லை.

அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து வீரர்கள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். 20 வீரர்கள் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்கள்.

ஏங்க அவர டீம்ல சேர்க்கல.. குல்தீப் ரொம்ப ஏமாற்றமா பீல் பண்ணியிருப்பாரு... அகர்கர் அதிருப்தி! ஏங்க அவர டீம்ல சேர்க்கல.. குல்தீப் ரொம்ப ஏமாற்றமா பீல் பண்ணியிருப்பாரு... அகர்கர் அதிருப்தி!

இந்திய அணி நிலை

இந்திய அணி நிலை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கேப்டன் விராட் கோலி விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில், இளம் அறிமுக வீரர்களை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

காயம்

காயம்

தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கி வந்தனர். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, அஸ்வின், ஜடேஜா என கிட்டத்தட்ட இந்திய டெஸ்ட் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் காயத்தில் சிக்கி உள்ளனர்.

இரண்டு வீரர்கள் அறிமுகம்

இரண்டு வீரர்கள் அறிமுகம்

இதனால், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர் என இரண்டு வீரர்களை அறிமுகம் செய்தது இந்திய அணி. ஷர்துல் தாக்குர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் சில நிமிடங்களிலேயே காயம் காரணமாக விலகி இருந்தார். எனவே, அவரும் அறிமுக வீரர் போலவே கருதப்பட்டார்.

அதிக வீரர்கள்

அதிக வீரர்கள்

இதற்கு முன் 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 18 வீரர்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த முறை 20 வீரர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 1996க்கு பின் ஒரே தொடரில் ஐந்து வீரர்களை அறிமுகம் செய்துள்ளது இந்திய அணி.

Story first published: Friday, January 15, 2021, 14:02 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
IND vs AUS : India registered record for playing more players in a series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X