For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை வீழ்த்திய இந்தியா.. பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

Recommended Video

நட்டுவிடம் முதலில் கோப்பையை கொடுத்த ரஹானே... வாழ்த்து மழையில் இந்திய அணி!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் தொடர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி இன்று திருத்தி எழுதி உள்ளது. இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

Jan 19, 2021, 1:11 pm IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா. நான்காவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 33 வருடமாக கப்பா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸி.யின் சாதனை முறியடிப்பு.

Jan 19, 2021, 11:56 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை நெருங்கி வருகிறது. மயங்க் அகர்வால் 4, பான்ட் 39 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 87 ரன்கள் தேவை.

Jan 19, 2021, 11:11 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அதிரடி ஆட்டம். புஜாரா 47, பான்ட் 28 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 119 ரன்கள் தேவை.

Jan 19, 2021, 9:58 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில், ரஹானே, ரோஹித் அவுட். புஜாரா 43, பான்ட் 2 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 153 ரன்கள் தேவை.

Jan 19, 2021, 9:06 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில் 91 ரன்னிற்கு அவுட். சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை தவறவிட்டார் கில். புஜாரா 26 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 196 ரன்கள் தேவை.

Jan 19, 2021, 8:32 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில் அதிரடி பேட்டிங். 72 ரன்கள் எடுத்து சுப்மான் கில் களத்தில் உள்ளார். புஜாரா 11 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 233 ரன்கள் தேவை.

Jan 18, 2021, 11:55 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ஆஸி. 294 ரன்னிற்கு ஆல் அவுட். இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Jan 18, 2021, 11:06 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் மழைக்கு பின் மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 280 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 18, 2021, 10:42 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியா இதுவரை 7 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 276 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 18, 2021, 9:38 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறல். ஆஸ்திரேலியா 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 260 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 18, 2021, 8:35 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்மித் - கிரீன் நிதானமான ஆட்டம். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 195 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 18, 2021, 7:50 am IST

Ind vs Aus: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. சிராஜ் வீசிய ஒரே ஓவரில் மார்னஸ், மேத்யூ வேட் அடுத்தடுத்து அவுட். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 17, 2021, 1:19 pm IST

Ind vs Aus: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா கூடுதலாக 54 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 12:34 pm IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா கூடுதலாக 33 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 11:47 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிரடியாக ஆடி வந்த ஷரத்துல் அவுட். 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷரத்துல் அவுட். வாஷிங்க்டன் சுந்தர் 54 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகிறார். இந்திய அணி 7 விக்கெட்டிற்கு 309 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 11:13 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷரத்துல் - சுந்தர் அடுத்தடுத்து அரைசதம். வாஷிங்க்டன் சுந்தர் 50, ஷரத்துல் தாக்கூர் 54 ரன்கள் எடுத்து அதிரடி. இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 11:05 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் - ஷரத்துல் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டம். வாஷிங்க்டன் சுந்தர் 45, ஷரத்துல் தாக்கூர் 47 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 9:49 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் - ஷரத்துல் அதிரடி ஆட்டம். வாஷிங்க்டன் சுந்தர் 31, ஷரத்துல் தாக்கூர் 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 17, 2021, 9:00 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி திணறல். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான காரணத்தால் இக்கட்டான நிலையில் இந்திய அணி.

Jan 17, 2021, 8:25 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி திணறல். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 16, 2021, 9:21 am IST

ரோஹித் சர்மா, புஜாரா பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 16, 2021, 9:21 am IST

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஷுப்மன் கில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Jan 15, 2021, 1:10 pm IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. அணி 5 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின் 38, கிரீன் 28 ரன்கள் எடுத்துள்ளனர். நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

Jan 15, 2021, 12:15 pm IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. அணி 5 விக்கெட்டை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின் 8, கிரீன் 19 ரன்கள் எடுத்துள்ளனர்.

Jan 15, 2021, 11:20 am IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் நடராஜன் விக்கெட் எடுத்து அசத்தல். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் முதல் விக்கெட். 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பவுலிங்கில் மேத்யூ வேட் அவுட்.

Jan 15, 2021, 11:19 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. வீரர் மார்னஸ் சதம் அடித்து அசத்தல். ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 101 ரன்கள் எடுத்துள்ளார்.

Jan 15, 2021, 10:49 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 83, வேட் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Jan 15, 2021, 10:49 am IST

Ind vs Aus: 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 83, வேட் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Jan 15, 2021, 9:30 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா நிதானமான பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 45, வேட் 11 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Jan 15, 2021, 8:50 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிராக மூன்றாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் அவுட். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 15, 2021, 7:27 am IST

Ind vs Aus: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 29, மார்னஸ் 19 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Jan 11, 2021, 12:01 pm IST

அஸ்வின் 33, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். விஹாரி 111 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் எடுத்து போராட்டம். இந்தியா வெற்றி பெற இன்னும் 93 ரன்கள் தேவை. மூன்றாவது டெஸ்ட் முடிய இன்னும் 11 ஓவர்களே உள்ளது

Jan 11, 2021, 11:32 am IST

அஸ்வின் 24, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். விஹாரி 111 பந்துகள் பிடித்து 7 ரன்கள் எடுத்து போராட்டம். இரண்டு முக்கிய வீரர்களும் காயத்தோடு போராடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 301 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 106 ரன்கள் தேவை. மூன்றாவது டெஸ்ட் முடிய இன்னும் 16 ஓவர்களே உள்ளது

Jan 11, 2021, 10:54 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணி போராட்டம். அஸ்வின் 15, விஹாரி 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 116 ரன்கள் தேவை.

Jan 11, 2021, 9:08 am IST
Mykhel

புஜாரா 77, விஹாரி 3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். பண்ட் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட். 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை .

Jan 11, 2021, 8:25 am IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது. ரிஷாப் பண்ட் 97 ரன்கள், புஜாரா 57 ரன்கள் எடுத்து அதிரடி. 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 250 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவை.

Jan 10, 2021, 12:39 pm IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா இரண்டு விக்கெட்டை இழந்த 98 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை.

Jan 10, 2021, 11:51 am IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட். 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 71 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 336 ரன்கள் தேவை.

Jan 10, 2021, 11:18 am IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 40 ரன்கள் எடுத்துள்ளது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர்.

Jan 10, 2021, 9:54 am IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர். இந்தியாவை விட ஆஸ்திரேலியா 406 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. இந்தியாவிற்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Jan 10, 2021, 8:53 am IST

Ind vs Aus: 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 354 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

Jan 10, 2021, 8:21 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸி. நிதானம். 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 220 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 09, 2021, 2:08 pm IST

ஸ்மித் 29, லாபுஷாக்னே 49 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 103 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Jan 09, 2021, 1:17 pm IST

ஆஸ்திரேலியா 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு 3௦௦ ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்க ஆஸ்திரேலியா முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jan 09, 2021, 1:17 pm IST

ஸ்மித் 29, லாபுஷாக்னே 49 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 103 ரன்களுக்கு ௨௧ விக்கெட்கள் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Jan 09, 2021, 11:22 am IST

வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஆஸ்திரேலியா 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

Jan 09, 2021, 10:42 am IST

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 10 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Jan 09, 2021, 10:32 am IST

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்யத் துவங்கியது. டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி பேட்டிங் செய்து வருகின்றனர்.

Jan 09, 2021, 10:06 am IST

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Jan 09, 2021, 10:06 am IST

ஜடேஜா 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Jan 09, 2021, 10:06 am IST

கம்மின்ஸ் பந்துவீச்சில் முகமது சிராஜ் ஆட்டமிழந்தார். இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Jan 09, 2021, 9:45 am IST

பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஜடேஜா, சிராஜ் களத்தில் ஆடி வருகின்றனர். ஜடேஜா ரன் குவிக்க போராடி வருகிறார்.

Jan 09, 2021, 9:13 am IST

இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 210 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா 128 ரன்கள் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Jan 09, 2021, 9:13 am IST

நவ்தீப் சைனி 4 ரன்களை எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Jan 09, 2021, 9:02 am IST

விஹாரி 4, அஸ்வின் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 206 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது.

Jan 09, 2021, 9:02 am IST

மூன்றாம் நாள் ஆட்டத்தில் புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ரஹானே 22, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்தனர்.

Jan 08, 2021, 1:03 pm IST

Ind vs Aus: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 96 ரன்கள் எடுத்துள்ளது. 45 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 96 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 5, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Jan 08, 2021, 12:16 pm IST

Ind vs Aus: முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 33 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 86 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 26 ரன்களுக்கு அவுட். அரை சதம் எடுத்திருந்த நிலையில் சுப்மான் கில்லும் அவுட்.

Jan 08, 2021, 11:56 am IST

Ind vs Aus: முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 29 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 81 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 26 ரன்களுக்கு அவுட்.

Jan 08, 2021, 11:34 am IST

Ind vs Aus: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 24 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி இந்தியா 61 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24, சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்துள்ளனர்.

Jan 08, 2021, 10:23 am IST

Ind vs Aus: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி இந்தியா 26 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 11, சுப்மான் கில் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.

Jan 08, 2021, 9:22 am IST

Ind vs Aus: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களுக்கு ஆல் அவுட். 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் ரன் அவுட். ஜடேஜா ரன் அவுட் உட்பட 5 விக்கெட் எடுத்து அசத்தல்.

Jan 08, 2021, 9:05 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 08, 2021, 8:44 am IST

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஸ்மித் சதம். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 102, ஸ்டார்க் 10 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Jan 08, 2021, 8:28 am IST

Ind vs Aus: 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 08, 2021, 7:44 am IST

Ind vs Aus: உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 08, 2021, 7:04 am IST

Ind vs Aus: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 76 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.

Jan 07, 2021, 12:13 pm IST

Ind vs Aus: ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 2 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 07, 2021, 11:29 am IST

இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரர் வில் புக்கோவஸ்கி அரை சதம் அடித்துள்ளார்.

Jan 07, 2021, 11:29 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் மீண்டும் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடி வரும் நிலையில் மழை.

Jan 07, 2021, 11:08 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஆஸி.யின் புக்கோவஸ்கி - மார்னஸ் அதிரடி. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 07, 2021, 10:08 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது.

Jan 07, 2021, 9:36 am IST

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டி மழைக்கு பின் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 29, 2020, 9:23 am IST

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து வென்றது.

Dec 29, 2020, 9:23 am IST

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடி வெற்றி. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Dec 29, 2020, 8:49 am IST

2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 32 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 39 ரன்கள் தேவை.

Dec 29, 2020, 8:48 am IST

Ind vs Aus: 2வது டெஸ்டில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்து இந்தியா அதிர்ச்சி. மயங்க் அகர்வால் 3 மற்றும் புஜாரா 5 ரன்களுக்கு அவுட்.

Dec 29, 2020, 8:28 am IST

Ind vs Aus: 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற 57 ரன்கள் தேவை. 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Dec 29, 2020, 7:02 am IST

Ind vs Aus: 2வது டெஸ்டில் ஆஸி. இந்தியாவை விட 59 ரன்கள் முன்னிலை. 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு ஆஸி.190 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 29, 2020, 6:34 am IST

Ind vs Aus: 2வது டெஸ்டில் ஆஸி. இந்தியாவை விட 41 ரன்கள் முன்னிலை. 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸி.171 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 28, 2020, 12:55 pm IST

ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கையில் 4 விக்கெட்கள் இருக்கும் நிலையில், 2 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 100 ரன்கள் சேர்க்கும் முன் இந்தியா கடைசி 4 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

Dec 28, 2020, 12:50 pm IST

ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 100 ரன்கள் சேர்க்கும் முன் இந்தியா கடைசி 4 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

Dec 28, 2020, 12:50 pm IST

ஆஸ்திரேலிய அணி கையில் 4 விக்கெட்கள் இருக்கும் நிலையில், 2 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Dec 28, 2020, 12:50 pm IST

ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 28, 2020, 11:33 am IST

டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் சிராஜ் பந்துவீச்சிலும், டிம் பெயின் 1 ரன் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 28, 2020, 11:14 am IST

ஜடேஜா பந்துவீச்சில் மேத்யூ வேட் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 98 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 28, 2020, 10:21 am IST

ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 28, 2020, 9:50 am IST

ஆஸ்திரேலிய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 28, 2020, 9:50 am IST

லாபுஷாக்னே 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 28, 2020, 8:45 am IST

உமேஷ் யாதவ் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறி உள்ளார்.

Dec 28, 2020, 8:44 am IST

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட், மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 28, 2020, 8:29 am IST

இந்திய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது.

Dec 28, 2020, 8:29 am IST

ஆஸ்திரேலிய அணி தன் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது.

Dec 27, 2020, 12:35 pm IST

IND vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 277 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது

Dec 27, 2020, 12:10 pm IST

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து அசத்திய ரஹானே. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 73 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 100 ரன்கள் எடுத்து அதிரடி.

Dec 27, 2020, 11:58 am IST

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிரடி காட்டும் ரஹானே. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 258 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 63 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 90 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கி வருகிறார்.

Dec 27, 2020, 11:23 am IST

IND vs Aus: பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டும் ரஹானே - ஜடேஜா. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 217 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எடுத்த 195 ரன்களை இந்தியா கடந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 22 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 71 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார். ஜடேஜா 14 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

Dec 27, 2020, 10:30 am IST

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 198 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எடுத்த 195 ரன்களை இந்தியா கடந்தது. கேப்டன் ரஹானே 57 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.

Dec 27, 2020, 9:46 am IST

IND vs Aus: 5 விக்கெட்டை இந்தியா இழந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு. சாரல் மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிப்பு. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 189 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 27, 2020, 9:23 am IST

IND vs Aus: 5 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷாப் பண்ட் அவுட். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 171 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 27, 2020, 8:54 am IST

IND vs Aus: 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹனுமா விஹாரி அவுட். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 விக்கெட்டை இழந்து இந்தியா 153 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 27, 2020, 8:11 am IST

IND vs Aus: இந்தியா அணியின் ரஹானே, விஹாரி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட்டை இழந்து இந்தியா 110 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 27, 2020, 7:08 am IST

IND vs Aus: இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட்டை இழந்து இந்தியா 90 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 27, 2020, 6:42 am IST

IND vs Aus: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் திணறல். மயங்க் அகர்வால், புஜாரா, சுப்மான் கில் அடுத்தடுத்து அவுட். இந்தியாவின் ரஹானே 2, ஹனுமா விஹாரி 12 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Dec 26, 2020, 12:40 pm IST

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இந்தியா 11 ஓவருக்கு 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 28, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Dec 26, 2020, 12:39 pm IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது

Dec 26, 2020, 11:54 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.

Dec 26, 2020, 11:32 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 195 ரன்னிற்கு சுருண்டது. 195 ரன்னிற்கு ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டையும் வீழ்த்தியது இந்தியா. பும்ரா 4, அஸ்வின் 3, சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட்டை எடுத்தனர்.

Dec 26, 2020, 11:21 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 70 ஓவரில் 177/8. இந்தியாவிற்கு எதிராக 8வது விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலியா திணறல். பும்ரா ஓவரில் மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுக்கு அவுட்.

Dec 26, 2020, 11:00 am IST

IND vs Aus: மொத்தமாக 7 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 1, கும்மின்ஸ் 1 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Dec 26, 2020, 10:52 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 156/7. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலியா திணறல். அஸ்வின் ஓவரில் டிம் பெயின் 13 ரன்களுக்கு அவுட். சிராஜ் ஓவரில் கேமரூன் கிரீன் 12 ரன்களுக்கு அவுட் .

Dec 26, 2020, 9:53 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 136/5. ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 6, டிம் பெயின் 0 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

Dec 26, 2020, 9:32 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்து திணறல். சிராஜ் வீசிய 50வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் அவுட். 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாரன்ஸ் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 26, 2020, 9:09 am IST
Dec 26, 2020, 9:09 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து திணறல். பும்ராவின் 42வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹெட் அவுட்.

Dec 26, 2020, 9:09 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து திணறல். பும்ராவின் 42வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹெட் அவுட்.

Dec 26, 2020, 8:42 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமான பார்ட்னர்ஷிப். ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஹெட் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார்கள். மார்னஸ் 38, ஹெட் 29 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 26, 2020, 7:57 am IST

மார்னஸ் 29, ஹெட் 8 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 26, 2020, 7:56 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானம். 3 விக்கெட்டை இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஹெட் நிதானம் .

Dec 26, 2020, 7:27 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் ஆஸி. 65/3. உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 26, 2020, 6:58 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்தியா ஆதிக்கம். ஆஸ்திரேலியாவின் ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து அவுட். ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் டக் அவுட்.

Dec 26, 2020, 6:26 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா திணறல். அஸ்வின் பவுலிங்கில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

Dec 26, 2020, 6:26 am IST

இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே பொறுப்பேற்பு.

Dec 26, 2020, 6:26 am IST

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு.

Dec 19, 2020, 1:30 pm IST

ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டம் ஆடி 21 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து தன் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தார்.

Dec 19, 2020, 1:30 pm IST

இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து இருந்தது.

Dec 19, 2020, 1:30 pm IST

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

Dec 19, 2020, 1:22 pm IST

மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

Dec 19, 2020, 1:22 pm IST

ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் சேர்த்தது. வெற்றிக்கு மிக அருகே சென்றுள்ளது.

Dec 19, 2020, 11:19 am IST

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. ஷமி காயம் காரணமாக பந்து வீச மாட்டார் என கூறப்படுகிறது.

Dec 19, 2020, 11:15 am IST

ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Dec 19, 2020, 11:15 am IST

இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

Dec 19, 2020, 11:14 am IST

ஷமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர் வெளியேறினார்.

Dec 19, 2020, 10:44 am IST

சாஹா 4 ரன்கள் எடுத்த நிலையிலும், அஸ்வின் ரன்னே எடுக்காத நிலையிலும் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

Dec 19, 2020, 10:43 am IST

இந்திய அணி 6 விக்கெட்களை இழந்த நிலையில் ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 19, 2020, 10:13 am IST

விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

Dec 19, 2020, 10:12 am IST

13வது ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் ஹேசல்வுட். இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது.

Dec 19, 2020, 10:12 am IST

ஹேசல்வுட் பந்துவீச்சில் ரஹானே டக் அவுட் ஆனார். 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

Dec 19, 2020, 10:06 am IST

12.1 ஓவரில் இந்திய அணி 15 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது 68 ரன்கள் மட்டுமே இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Dec 19, 2020, 10:06 am IST

இந்திய அணி 15 ரன்கள் எடுத்த நிலையில் வரிசையாக 3 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 19, 2020, 10:06 am IST

புஜாரா கம்மின்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 19, 2020, 9:46 am IST

பும்ரா 2 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Dec 19, 2020, 9:36 am IST

முதல் டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால், பும்ரா பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 18, 2020, 5:20 pm IST

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது. களத்தில் பும்ரா, மயங்க் அகர்வால் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 300 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க முயற்சி செய்யும்.

Dec 18, 2020, 4:54 pm IST

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா நைட் வாட்ச்மேன் பணியை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Dec 18, 2020, 4:54 pm IST

ஆஸி. 191 ஆல்-அவுட்.. இந்தியா 2ஆம் இன்னிங்க்ஸ் ஆரம்பம்! இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர்.

Dec 18, 2020, 4:30 pm IST

உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஹேசல்வுட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் 73 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்தியா 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Dec 18, 2020, 4:30 pm IST

4 விக்கெட் அள்ளிய அஸ்வின்.. ஆஸி. திணறல்! நாதன் லியோன் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், அத்துடன் இந்த டெஸ்டில் தன் 4வது விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Dec 18, 2020, 4:04 pm IST

மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

Dec 18, 2020, 3:05 pm IST

லாபுஷாக்னே 47 ரன்களிலும், கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

Dec 18, 2020, 3:05 pm IST

உமேஷ் யாதவ் 54வது ஓவரில் லாபுஷாக்னே மற்றும் பாட் கம்மின்ஸ் விக்கெட்களை கைப்பற்றினார்.

Dec 18, 2020, 2:16 pm IST

ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய அணியைப் போலவே ஆஸ்திரேலிய அணியும் நிதான ஆட்டம் ஆடி வருகிறது.

Dec 18, 2020, 2:16 pm IST

கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். கிரீன் 11 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 18, 2020, 1:02 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 29 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 18, 2020, 12:38 pm IST

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்து வருகின்றனர். லாபுஷாக்னே கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பும்ரா மற்றும் ப்ரித்வி ஷா நழுவ விட்டனர்.

Dec 18, 2020, 11:31 am IST

ஜோ பர்ன்ஸ் 41 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

Dec 18, 2020, 11:09 am IST

மேத்யூ வேட் 51 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 18, 2020, 10:32 am IST

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் துவக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.

Dec 18, 2020, 9:58 am IST

அஸ்வினை தொடர்ந்து சாஹா 9, உமேஷ் யாதவ் 6, ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை அடுத்து முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Dec 18, 2020, 9:40 am IST

இரண்டாம் நாளின் முதல் ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Dec 18, 2020, 9:31 am IST

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் துவனாக் உள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர உள்ளது. அஸ்வின், சாஹா களத்தில் உள்ளனர்.

Dec 17, 2020, 5:20 pm IST

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் 15, சாஹா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருந்தது.

Dec 17, 2020, 4:51 pm IST

ஹனுமா விஹாரி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 17, 2020, 4:36 pm IST

அஜின்க்யா ரஹானே 42 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 17, 2020, 4:24 pm IST

இந்திய அணி 80 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே 42, ஹனுமா விஹாரி 4 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Dec 17, 2020, 4:19 pm IST

74 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ரன் அவுட் செய்யப்பட்டார். ரஹானே எடுத்த தவறான முடிவால் கோலி தன் விக்கெட்டை இழந்தார்.

Dec 17, 2020, 3:53 pm IST

விராட் கோலி 67, ரஹானே 27 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 73 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 3 விக்கேகள் இழந்து ஆடி வருகிறது.

Dec 17, 2020, 3:02 pm IST

விராட் கோலி அரைசதம் கடந்தார். 123 பந்துகளில் கோலி அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.

Dec 17, 2020, 2:22 pm IST

55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 2 ரன்களும், கோலி 39 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Dec 17, 2020, 2:16 pm IST

புஜாரா 43 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 17, 2020, 1:16 pm IST

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 71 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. புஜாரா 28, கோலி 21 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இருவரும் நிதான ஆட்டம் ஆடி வருகின்றனர்.

Dec 17, 2020, 11:41 am IST

விராட் கோலி 22 பந்துகளில் 5 ரன்களும், புஜாரா 88 பந்துகளில் 17 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர்.

Dec 17, 2020, 11:40 am IST

இந்திய அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வருகிறது. 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்திய அணி.

Dec 17, 2020, 11:06 am IST

18.1 ஓவரில் இந்திய அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து உள்ளது. துவக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறது.

Dec 17, 2020, 11:06 am IST

கம்மின்ஸ் பந்துவீச்சில் மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

Dec 17, 2020, 11:06 am IST

புஜாரா, மயங்க் அகர்வால் நிதான ஆட்டம் ஆடி வருகின்றனர்.

Dec 17, 2020, 9:45 am IST

ப்ரித்வி ஷா 2வது பந்திலேயே டக் அவுட் ஆனார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் அவர் மோசமான ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ப்ரித்வி ஷாவைத் தொடர்ந்து புஜாரா, மயங்க் அகர்வால் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 17, 2020, 9:19 am IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

Dec 17, 2020, 9:19 am IST

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச உள்ளது.

Dec 17, 2020, 9:14 am IST
Mykhel

Aus vs Ind : முதல் டெஸ்டில் இந்தியா டாஸ் வென்றது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச உள்ளது.

Dec 08, 2020, 5:22 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி . இந்தியா 20 ஓவர் முடிவில் 174/7 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

Dec 08, 2020, 5:09 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அதிரடி. இந்தியா 17 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 79, பாண்டியா 20 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 08, 2020, 4:52 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா. சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட். இந்தியா 14 ஓவர் முடிவில் 109/4 ரன்கள் எடுத்துள்ளது .

Dec 08, 2020, 4:42 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அரைசதம். இந்தியா 8 ஓவர் முடிவில் 94/2 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 50, தவான் 10 ரன்கள் எடுத்துள்ளனர்.

Dec 08, 2020, 4:41 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அரைசதம். இந்தியா 8 ஓவர் முடிவில் 94/2 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 50, தவான் 10 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 08, 2020, 4:26 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்தியா அதிரடி பேட்டிங். இந்தியா 8 ஓவர் முடிவில் 69/1 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 36, தவான் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.

Dec 08, 2020, 3:54 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. முதல் ஓவரிலேயே இந்தியாவின் கே. எல் ராகுல் டக் அவுட் .

Dec 08, 2020, 3:33 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய 186/5 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Dec 08, 2020, 3:12 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 16 ஓவர் முடிவில் 145/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக மேக்ஸ்வெல் 37, மேத்யூ வேட் 73 ரன்கள் ஆடி வருகிறார்கள்.

Dec 08, 2020, 2:48 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 12 ஓவர் முடிவில் 101/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக மேக்ஸ்வெல் 11, மேத்யூ வேட் 58 ரன்கள் ஆடி வருகிறார்கள்.

Dec 08, 2020, 2:33 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 2வது விக்கெட்டை இழந்தது. 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 82/2 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் 23 ரன்களுக்கு அவுட் ஆனார்.

Dec 08, 2020, 2:09 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 5 ஓவர் முடிவில் 45/1 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக ஸ்மித் 6, மேத்யூ வேட் 32 ரன்கள் ஆடி வருகிறார்கள் .

Dec 08, 2020, 1:53 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. 2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 14/1 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஆரோன் பின்ச் டக் அவுட் ஆனார் .

Dec 08, 2020, 1:49 pm IST

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம். ஒரு ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக ஆரோன் பின்ச், மேத்யூ வேட் ஆடி வருகிறார்கள் .

Dec 08, 2020, 1:19 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய முடிவு.

Dec 06, 2020, 5:21 pm IST

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2 - 0 என கைப்பற்றியது.

Dec 06, 2020, 5:19 pm IST

கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸ் அடித்து 19.4 ஓவரில் இந்திய அணியை வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.

Dec 06, 2020, 5:11 pm IST

ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை.

Dec 06, 2020, 5:11 pm IST

இந்திய அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை

Dec 06, 2020, 4:41 pm IST

தவான் அரைசதம் அடித்து 52 ரன்கள் குவித்த நிலையில் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 06, 2020, 4:28 pm IST

கேஎல் ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்துள்ளது.

Dec 06, 2020, 4:12 pm IST

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் குவித்தது.

Dec 06, 2020, 3:46 pm IST

இந்திய அணி சேஸிங் செய்யத் துவங்கியது. ராகுல், ஷிகர் தவான் துவக்கம் அளித்து ஆடி வருகின்றனர்.

Dec 06, 2020, 3:21 pm IST

ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்.

Dec 06, 2020, 3:14 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 06, 2020, 3:04 pm IST

சாஹல் வீசிய 16வது ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் குவித்தது. 17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

Dec 06, 2020, 2:45 pm IST

மேக்ஸ்வெல் 22 ரன்கள் சேர்த்த நிலையில் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்தாலும் 9க்கும் மேல் ரன் ரேட் வைத்துள்ளது.

Dec 06, 2020, 2:42 pm IST

11 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர்.

Dec 06, 2020, 2:27 pm IST

அதிரடி ஆட்டம் ஆடி மேத்யூ வேட் அரைசதம் கடந்தார். 58 ரன்கள்எடுத்த நிலையில் அவர் ரன் அவுட் ஆனார். 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 06, 2020, 2:08 pm IST
Mykhel

ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். டிஆர்சி ஷார்ட் நடராஜன் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி 4.3 ஓவரில் 47 ரன்கள் குவித்து 1 விக்கெட் இழந்துள்ளது.

Dec 06, 2020, 1:54 pm IST

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. 2 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூ வேட், டிஆர்சி ஷார்ட் துவக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.

Dec 06, 2020, 1:20 pm IST

இந்திய அணியில் மனிஷ் பாண்டே நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் காயத்தால் விலகிய நிலையில் மேத்யூ வேட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Dec 06, 2020, 1:20 pm IST

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Dec 06, 2020, 1:20 pm IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன 2வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.

Dec 04, 2020, 5:30 pm IST

கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 11ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது.

Dec 04, 2020, 5:25 pm IST

நடராஜன் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழந்தார். இது அவரது மூன்றாவது விக்கெட் ஆகும். 19 ஓவர்களில் ஆஸ்திரேலியா 135 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடி வருகிறது.

Dec 04, 2020, 5:13 pm IST

மேத்யூ வேட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 04, 2020, 5:12 pm IST

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவை.

Dec 04, 2020, 4:31 pm IST

ஆரோன் பின்ச் 35 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு பதில் சாஹல் அணியில் மாற்று வீரராக ஆடி வருகிறார்.

Dec 04, 2020, 4:29 pm IST

ஜடேஜாவின் ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு பதில் சாஹல் அணியில் மாற்று வீரராக ஆடி வருகிறார்.

Dec 04, 2020, 4:29 pm IST

ஆரோன் பின்ச் 35 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 04, 2020, 4:24 pm IST

6 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 8.83 ஆக உள்ளது.

Dec 04, 2020, 3:59 pm IST

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. ஆரோன் பின்ச், டிஆர்சி ஷார்ட் துவக்கம் அளித்து ஆடி வருகின்றனர்.

Dec 04, 2020, 3:29 pm IST

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கேஎல் ராகுல் 51 ரன்கள் குவித்து இருந்தார்.

Dec 04, 2020, 3:22 pm IST

ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்துள்ளது. 19வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.

Dec 04, 2020, 3:21 pm IST

இந்திய அணி முதலில் பேட்டிங்.. 6 விக்கெட்கள் இழந்து தவிப்பு!. ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.

Dec 04, 2020, 3:09 pm IST

இந்திய அணி முதலில் பேட்டிங்.. 5 விக்கெட்கள் இழந்து தவிப்பு!. ஹர்திக் பாண்டியா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.

Dec 04, 2020, 2:51 pm IST

Ind vs Aus : இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. 92 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

Dec 04, 2020, 2:47 pm IST

மனிஷ் பாண்டே 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்து வருகிறது.

Dec 04, 2020, 2:37 pm IST

கேஎல் ராகுல் அபாரமாக ஆடி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Dec 04, 2020, 2:37 pm IST

கேஎல் ராகுல் அபாரமாக ஆடி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Dec 04, 2020, 2:18 pm IST

இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 51 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 04, 2020, 2:18 pm IST

விராட் கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்வெப்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 04, 2020, 2:00 pm IST

இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 13 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்துள்ளது.

Dec 04, 2020, 1:59 pm IST

ஷிகர் தவான் 1 ரன் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 04, 2020, 1:26 pm IST

கேப்டன் கோலி அவரை தேர்வு செய்ய நிறைய காரணம் உள்ளது என மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரது சிறப்பான செயல்பாட்டை சுட்டிக் காட்டி பேசினார்.

Dec 04, 2020, 1:26 pm IST

இந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Dec 04, 2020, 1:25 pm IST

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

Dec 02, 2020, 5:01 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 302 ரன்கள் எடுத்தது. 49.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது .

Dec 02, 2020, 4:53 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 9 விக்கெட்டை இழந்துள்ளது. ஆஸ்திரேலியா 47.1 ஓவருக்கு 278/9 ரன்கள் எடுத்துள்ளது. ஷரத்துல் தாக்கூர், நடராஜன் பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட் .

Dec 02, 2020, 4:37 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 45 ஓவருக்கு 270/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அகர் 23 மற்றும் அபாட் 1 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா வெற்றிபெற 30 பந்தில் 33 ரன்கள் தேவை .

Dec 02, 2020, 4:23 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அதிரடி பேட்டிங். ஆஸ்திரேலியா 43 ஓவருக்கு 246/6 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அகர் 16 மற்றும் மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா வெற்றிபெற 42 பந்தில் 57 ரன்கள் தேவை .

Dec 02, 2020, 3:58 pm IST

அலெக்ஸ் கேரி 38 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 6வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. 38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 02, 2020, 3:41 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 34 ஓவருக்கு 176/65 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கேரி 28 மற்றும் கேமரூன் 5 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 02, 2020, 3:17 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா நிதானமான பேட்டிங். ஆஸ்திரேலியா 30 ஓவருக்கு 151/4 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கேரி 16 மற்றும் கேமரூன் 15 ரன்கள் எடுத்துள்ளனர்.

Dec 02, 2020, 2:49 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா திணற தொடங்கி உள்ளது. ஆஸ்திரேலிய அணி மூன்றாவது விக்கெட்டை இழந்தது. ஷரத்துல் ஓவரில் மொய்சஸ் 22 ரன்களுக்கு அவுட். ஆஸ்திரேலியா 23 ஓவருக்கு 118/3 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 1 மற்றும் பின்ச் 73 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 02, 2020, 2:36 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 20 ஓவருக்கு 98/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மொய்சஸ் 17 மற்றும் பின்ச் 59 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 02, 2020, 2:19 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 14 ஓவருக்கு 66/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மொய்சஸ் 9 மற்றும் பின்ச் 35 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 02, 2020, 2:10 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக இரண்டாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. ஷரத்துல் ஓவரில் ஸ்மித் 34 ரன்களுக்கு அவுட். ஆஸ்திரேலியா 12 ஓவருக்கு 64/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மொய்சஸ் 8 மற்றும் பின்ச் 34 ரன்கள் எடுத்துள்ளனர்.

Dec 02, 2020, 1:55 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா நிதானமான பேட்டிங். ஆஸ்திரேலியா 9 ஓவருக்கு 45/1 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 மற்றும் பின்ச் 28 ரன்கள் எடுத்துள்ளனர் .

Dec 02, 2020, 1:35 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. நடராஜன் ஓவரில் மாரன்ஸ் போல்ட். ஆஸ்திரேலியா 5.1 ஓவருக்கு 25/1 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 02, 2020, 1:21 pm IST

AUS vs IND: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா நிதான தொடக்கம். 1 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டு ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் மார்னஸ், பின்ச் ஆகியோர் ஆடி வருகிறார்கள்.

Dec 02, 2020, 12:41 pm IST

ஹர்திக் பாண்டியா 92, ஜடேஜா 66 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Dec 02, 2020, 12:41 pm IST

இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 303 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா.

Dec 02, 2020, 12:30 pm IST

ஜடேஜா அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இந்திய அணி 5 விக்கெட் இழந்து 48 ஓவர்களில் 279 ரன்கள் குவித்தது.

Dec 02, 2020, 12:28 pm IST

இந்திய அணி 45 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.

Dec 02, 2020, 12:04 pm IST

ஹர்திக் பாண்டியா 55 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்திய அணி 43.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

Dec 02, 2020, 11:56 am IST

41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. ஹர்திக் பாண்டியா 41, ஜடேஜா 15 ரன்கள் எடுத்துள்ளனர்.

Dec 02, 2020, 11:23 am IST

இந்திய அணி 33 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா, ஜடேஜா பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 02, 2020, 11:22 am IST

விராட் கோலி 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறத.

Dec 02, 2020, 11:13 am IST

இந்திய அணி 31 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. கோலி, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து வருகின்றனர்.

Dec 02, 2020, 10:59 am IST

கேல் ராகுல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Dec 02, 2020, 10:43 am IST

ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 22.4 ஓவர்களில் 114 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

Dec 02, 2020, 10:30 am IST

இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. விராட் கோலி 33, ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி நிதானமாக ரன் சேர்த்து வருகிறது.

Dec 02, 2020, 10:17 am IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா திணறல். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். தவான் 16 ரன்களுக்கும், சுப்மான் கில் 33 ரன்களுக்கும் அவுட். 16 ஓவர் முடிவில் இந்தியா 84/2 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Dec 02, 2020, 10:16 am IST

விராட் கோலி 12000 சர்வதேச ஒருநாள் போட்டி ரன்களை கடந்து சாதனை படைத்தார்

Dec 02, 2020, 8:49 am IST

3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம் செய்யப்பட்டார். முதன்முறையாக இந்திய அணிக்காக ஆட உள்ளார் நடராஜன்.

Nov 29, 2020, 5:20 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி. 50 ஓவர் முடிவில் இந்தியா 338/9 ரன்கள் எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 389 ரன்கள் எடுத்து இருந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Nov 29, 2020, 4:56 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோல்வியின் விளிப்பில் உள்ளது. 45 ஓவர் முடிவில் இந்தியா 303/5 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்தில் இந்தியா 87 ரன்கள் எடுக்க வேண்டும்.

Nov 29, 2020, 4:26 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 39 ஓவர் முடிவில் இந்தியா 254/4 ரன்கள். பாண்டியா 10, ராகுல் 55 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 4:09 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி சறுக்கல். நன்றாக ஆடி வந்த கோலி 89 ரன்களுக்கு அவுட். 35 ஓவர் முடிவில் இந்தியா 225/4 ரன்கள். பாண்டியா 1, ராகுல் 37 ரன்கள் எடுத்துள்ளனர்

Nov 29, 2020, 3:42 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதனமாக ரன் சேர்த்து வருகிறது. 30 ஓவர் முடிவில் இந்தியா 186/3 ரன்கள். கோலி 72, ராகுல் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 3:16 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தொடர்ந்து திணறல். 123 ஓவர் முடிவில் இந்தியா 153/3 ரன்கள். கோலி 53 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஷ்ரேயாஸ் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Nov 29, 2020, 2:53 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதானமான பேட்டிங். 17 ஓவர் முடிவில் இந்தியா 108/2 ரன்கள். கோலி 27, ஷ்ரேயாஸ் 20 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 2:20 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா திணறல். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து திணறல். தவான் 30, மயங்க் 28 ரன்கள் எடுத்து அவுட். 9 ஓவர் முடிவில் இந்தியா 61 ரன்கள். கோலி 0, ஷ்ரேயாஸ் 1 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 2:05 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா அதிரடி பேட்டிங். 6 ஓவர் முடிவில் இந்தியா 47 ரன்கள். தவான் 28, மயங்க் 22 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 1:43 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதானமான பேட்டிங். 2 ஓவர் முடிவில் இந்தியா 12 ரன்கள். தவான் 4, மயங்க் 8 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 1:06 pm IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 389/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 390 ரன்கள் இலக்கு.

Nov 29, 2020, 12:29 pm IST
Mykhel

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 42 ஓவர் முடிவில் 296/3 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்தது. ஸ்மித் 104 ரன்களுக்கு அவுட். Ind Vs Aus: மார்னஸ் 42, மேக்ஸ்வெல் 1 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 11:30 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 31 ஓவர் முடிவில் 197/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்தது. வார்னர் 83 ரன்களுக்கு அவுட். Ind Vs Aus: மார்னஸ் 8, ஸ்மித் 42 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 11:04 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 25 ஓவர் முடிவில் 153/1 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை இழந்தது. பின்ச் 60 ரன்களுக்கு அவுட். Ind Vs Aus: டேவிட் வார்னர் 82, ஸ்மித் 7 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 10:47 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 130 ரன்கள் எடுத்துள்ளனர். டேவிட் வார்னர் 76, பின்ச் 50 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 10:25 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 14 8ஓவர் முடிவில் 93 ரன்கள் எடுத்துள்ளனர். டேவிட் வார்னர் 54, பின்ச் 35 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 9:46 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 7 ஓவர் முடிவில் 41 ரன்கள் எடுத்துள்ளனர். டேவிட் வார்னர் 29, பின்ச் 10 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 9:28 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி 3 ஓவர் முடிவில் 10 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 9, பின்ச் 0 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 29, 2020, 9:11 am IST

Ind Vs Aus: ஆஸ்திரேலிய அணி பேட்டிங் இறங்கி உள்ளது. டேவிட் வார்னர், பின்ச் ஆகியோர் பேட்டிங் இறங்கி உள்ளனர்.

Nov 29, 2020, 9:11 am IST

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே பிளேயிங் லெவன் இன்று இந்திய அணி சார்பாக ஆடுகிறது.

Nov 29, 2020, 8:51 am IST
Mykhel

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

Nov 27, 2020, 5:42 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி. 50 ஓவர் முடிவில் இந்தியா 308/8 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 374 ரன்கள் எடுத்து இருந்தது.

Nov 27, 2020, 5:36 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 12 பந்தில் 76 ரன்கள் எடுக்க வேண்டும். 48 ஓவர் முடிவில் இந்தியா 299/7 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 5:20 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து திணறல். 45 ஓவர் முடிவில் இந்தியா 273/6 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 5:04 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 38.5 ஓவர் முடிவில் இந்தியா 247/6 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 74, ஹர்திக் 90 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளனர்.

Nov 27, 2020, 4:45 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதான ஆட்டம் ஆடி வருகிறது. 34 ஓவர் முடிவில் இந்தியா 227/4 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 73, ஹர்திக் 80 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 27, 2020, 4:30 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதான ஆட்டம் ஆடி வருகிறது. 20 ஓவர் முடிவில் இந்தியா 209/4 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 59, ஹர்திக் 75 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 27, 2020, 4:06 pm IST

ஹர்திக் பாண்டியா, தவான் அரைசதம் கடந்தனர். 26 ஓவர் முடிவில் இந்தியா 182/4 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 4:06 pm IST

AUS vs IND: ஹர்திக் பாண்டியா, தவான் அரைசதம் கடந்தனர். 26 ஓவர் முடிவில் இந்தியா 182/4 ரன்கள் எடுத்துள்ளது

Nov 27, 2020, 3:48 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா நிதானம். 23 ஓவர் முடிவில் இந்தியா 169/4 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 3:19 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறல். 16 ஓவர் முடிவில் இந்தியா 114/4 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 3:00 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில். இந்தியா நிதானம் 13 ஓவர் முடிவில் இந்தியா 99/3 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 2:47 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். 10 ஓவர் முடிவில் இந்தியா 85/3 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 2:38 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா அதிரடி ஆட்டம். 9 ஓவர் முடிவில் இந்தியா 76/1 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 2:29 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது

Nov 27, 2020, 2:29 pm IST

மயங்க் அகர்வால் 22 ரன்களுக்கு அவுட் ஆனார்

Nov 27, 2020, 2:29 pm IST

7 ஓவர் முடிவில் இந்தியா 64/1 ரன்கள் எடுத்துள்ளது

Nov 27, 2020, 2:17 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது

Nov 27, 2020, 2:17 pm IST

4 ஓவர் முடிவில் இந்தியா 46 ரன்கள் எடுத்துள்ளது

Nov 27, 2020, 2:00 pm IST

AUS vs IND: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது

Nov 27, 2020, 2:00 pm IST

375 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி தொடக்கம்

Nov 27, 2020, 2:00 pm IST

ஒரு ஓவர் முடிவில் இந்தியா 20 ரன்கள் எடுத்துள்ளது

Nov 27, 2020, 1:59 pm IST

இந்திய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. ஷிகர் தவான், மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர். மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார்.

Nov 27, 2020, 1:40 pm IST

இந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது. பும்ரா 73 ரன்களும், நவ்தீப் சைனி 83 ரன்களும், சாஹல் 89 ரன்களும் வாரி இறைத்தனர். ஷமி 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Nov 27, 2020, 1:35 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதம் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இது அவரது 10வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

Nov 27, 2020, 1:29 pm IST

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 374 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 375 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது

Nov 27, 2020, 1:17 pm IST

ஸ்டீவ் ஸ்மித் 62 பந்துகளில் சதம் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இது அவரது 10வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

Nov 27, 2020, 1:13 pm IST

ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 95, கேரி 10 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

Nov 27, 2020, 1:12 pm IST

ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 355 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 95, கேரி 10 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

Nov 27, 2020, 1:00 pm IST

மார்னஸ் லாபுஷாக்னே 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக அதிரடி ஆட்டம் ஆடக் கூடிய அலெக்ஸ் கேரி களமிறங்கி உள்ளார்.

Nov 27, 2020, 12:56 pm IST

மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 44.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணி 350 ரன்களை எட்டக் கூடும்.

Nov 27, 2020, 12:56 pm IST

சாஹல் தசைப்பிடிப்பு காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் 10 ஓவர்களில் 89 ரன்கள் வாரி இறைத்து இருந்தார்.

Nov 27, 2020, 12:36 pm IST

மார்கஸ் ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து மேக்ஸ்வெல் பேட்டிங் செய்து வருகிறார்.

Nov 27, 2020, 12:25 pm IST

40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் 6.6 ஆக உள்ளது. இந்திய அணிக்கு 350 ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

Nov 27, 2020, 12:25 pm IST

ஆரோன் பின்ச் சதம் கடந்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 12:22 pm IST

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தன் 17வது ஒருநாள் போட்டி சதத்தை கடந்தார்.

Nov 27, 2020, 12:15 pm IST

36 பந்துகளில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது.

Nov 27, 2020, 12:02 pm IST

ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 35 ஓவர்களில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் - 5.94 ஆகும்.

Nov 27, 2020, 11:49 am IST

31 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. பின்ச் 86 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Nov 27, 2020, 11:35 am IST

வார்னர் 69 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 28 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 11:14 am IST

வார்னர் அரைசதம் கடந்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 10:52 am IST

19 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா 100 ரன்களை எட்டிய நிலையில், போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Nov 27, 2020, 10:51 am IST

69 பந்துகளில் ஆரோன் பின்ச் அரைசதம் கடந்தார். வார்னர் 40 ரன்கள் எடுத்துள்ளார்.

Nov 27, 2020, 10:40 am IST

16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 10:27 am IST

13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. பின்ச் 32, வார்னர் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.

Nov 27, 2020, 10:10 am IST

10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியால் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

Nov 27, 2020, 9:35 am IST

3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 27, 2020, 9:19 am IST

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் துவங்கியது. ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் துவக்க வீரர்களாக இறங்கினர். இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார்.

Nov 27, 2020, 9:01 am IST

முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி - ஷிகர் தவான், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

Nov 27, 2020, 9:00 am IST

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் மயங்க் அகர்வால் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

Nov 27, 2020, 8:38 am IST

காயம் காரணமாக இந்தியாவில் சிகிச்சை மற்றும் பயிற்சி செய்து வரும் இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Nov 27, 2020, 8:36 am IST

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் யாரை துவக்க வீரராக கேப்டன் கோலி களமிறக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Nov 27, 2020, 8:36 am IST

வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

Nov 26, 2020, 10:24 pm IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன கிரிக்கெட் தொடர் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளது.

Nov 26, 2020, 10:24 pm IST
Mykhel

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

Nov 26, 2020, 10:23 pm IST

முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ரசிகர்களுக்கு குறைந்த அளவில் அனுமதி உண்டு.

Nov 26, 2020, 10:23 pm IST
Mykhel

ஆஸ்திரேலிய அணி ஆரோன் பின்ச் தலைமையிலும், இந்திய அணி விராட் கோலி தலைமையிலும் களமிறங்க உள்ளது.

Nov 26, 2020, 10:23 pm IST

இந்திய அணியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா இடம் பெறாத நிலையில் யார் துவக்கம் அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Aus vs Ind first test - day night test live updates

Story first published: Tuesday, January 19, 2021, 18:58 [IST]
Other articles published on Jan 19, 2021
English summary
Aus vs Ind first test - day night test live updates
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X