இந்தியா - ஆஸி. டி20 தொடர்.. போட்டி அட்டவணை.. வீரர்கள் பட்டியல்.. போனில் பார்ப்பது எப்படி?

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 தொடர் அடுத்து நடைபெற உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 - 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் மட்டுமே இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற கடும் முயற்சி செய்யும் என்பதால் இந்த தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டி20 தொடர்

டி20 தொடர்

டி20 தொடரிலும் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டு மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே, ஒருநாள் தொடர் நடைபெற்ற அதே மைதானங்கள் தான் டி20 தொடரிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

தேதி, இடம்

தேதி, இடம்

முதல் போட்டி டிசம்பர் 4 அன்று நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி 6ஆம் தேதியும், மூன்றாவது போட்டி 8ஆம் தேதியும் நடைபெற உள்ளது. முதல் போட்டி கான்பெர்ரா மைதானத்திலும், அடுத்த இரு போட்டிகள் சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ளது.

டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

இதே மைதானங்களில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றன. எனவே, டி20 தொடரிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்யவே இரு அணிகளும் விரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி துவங்கும் நேரம்

போட்டி துவங்கும் நேரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டி20 போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 1.40 மணிக்கு துவங்க உள்ளது. ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒளிபரப்பு

ஒளிபரப்பு

இந்த டி20 தொடர் இந்தியாவில் சோனி டென் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. சோனி டென் 1, சோனி சிக்ஸ், சோனி டென் 3 ஆகிய தொலைக்காட்சிகளில் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிகளை காணலாம்.

போனில் பார்ப்பது எப்படி?

போனில் பார்ப்பது எப்படி?

ஸ்மார்ட்போன்களில் இந்த போட்டிகளை சோனி லைவ் செயலி மூலம் பார்க்கலாம். ஆனால், அதற்கு சந்தா செலுத்தி இருக்க வேண்டும். ஜியோ டிவி, ஏர்டெல் டிவி உள்ளிட்ட செயலிகள் மூலம் இலவசமாக கண்டு களிக்கலாம்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

டி20 தொடருக்கான இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி நடராஜன்.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி விவரம்

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி - ஆரோன் பின்ச், ஸீன் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், டிஆர்சி ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், ஆடம் ஜாம்பா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : India vs Australia T20 series timing, telecast
Story first published: Thursday, December 3, 2020, 10:30 [IST]
Other articles published on Dec 3, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X