For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதுக்குன்னு ஒரு அளவு இல்லையா? எல்லை மீறிய விராட் கோலி.. ஐசிசி எடுத்த அதிரடி ஆக்ஷன்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு 20 சதவீதம் அபாரதம் விதித்துள்ளது ஐசிசி.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சின் போது கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார்.

இதை அடுத்து இந்திய வீரர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது. முதல் விக்கெட்டை வீழ்த்தவே இந்திய அணிக்கு 27 ஓவர்கள் ஆனது. முதல் 10 ஓவர்களை வீசி முடிக்கவே இந்திய அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

ஒரு நியாய தர்மம் வேண்டாமா? நொந்து போன இந்திய வீரர்.. குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்!ஒரு நியாய தர்மம் வேண்டாமா? நொந்து போன இந்திய வீரர்.. குற்ற உணர்ச்சியில் மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்!

நீண்ட நேரம்

நீண்ட நேரம்

ஒரு பக்கம் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் மழை பொழிந்ததால் விராட் கோலி பந்துவீச்சை மாற்ற, பீல்டிங் மாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். அதனால் ஓவர் ரேட் குறைந்தது. போட்டி முடிவில் கோலி ஐசிசி ரெப்ரீயிடம் தன் தவறை ஒப்புக் கொண்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

போட்டி நடந்த போதே பல ரசிகர்கள் இதை உணர்ந்து இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வதாக கூறி வந்தனர். முதலில் ஏற்பட்ட தாமதத்தை ஜடேஜாவின் விரைவான பந்துவீச்சை வைத்து ஓரளவு நிரப்பினார் விராட் கோலி. ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு ஓவர் குறைவாகவே வீசியது இந்திய அணி.

அபராதம்

அபராதம்

ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் தான் கேப்டன் விராட் கோலி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். ஐசிசி விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்.

20 சதவீதம் அபராதம்

20 சதவீதம் அபராதம்

ஒரு கூடுதல் ஓவருக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். முன்பு கேப்டன்களுக்கு மட்டும் இருந்த இந்த அபராதம் மாற்றி அமைக்கப்பட்ட ஐசிசி விதிகளின் படி அணியில் இடம் பெறும் வீரர்களுக்கும் பொருந்தும். இதை அடுத்து அனைத்து இந்திய வீரர்களுக்கும், அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 375 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.

Story first published: Saturday, November 28, 2020, 16:04 [IST]
Other articles published on Nov 28, 2020
English summary
IND vs AUS : Indian team fined for slow over rate in first ODI against Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X