For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. தொடரை விடுங்க.. இனிமே தான் இருக்கு சிக்கல்.. செமயாக சிக்கிக் கொண்ட இந்திய அணி!

பிரிஸ்பேன் : இந்திய அணி தட்டுத்தடுமாறி ஆஸ்திரேலிய அணியை சமாளித்து மூன்று போட்டிகளின் முடிவில் 1 - 1 என சமநிலையை எட்டி உள்ளது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் பல புதிய வீரர்களை ஆட வைத்து போராடி வருகிறது.

ஆஸ்திரேலிய தொடரை சமாளித்தாலும் அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணியால் சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்.. ரஹானே எடுத்த அந்த முடிவு!இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. இந்திய அணிக்கு நேர்ந்த சோகம்.. ரஹானே எடுத்த அந்த முடிவு!

சிக்கிய வீரர்கள்

சிக்கிய வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முகமது ஷமி காயம் அடைந்து வெளியேறினார். அதற்கு முன் இஷாந்த் சர்மா காயம் அடைந்து தொடரிலேயே பங்கேற்கவில்லை. உமேஷ் யாதவ், பும்ரா என இந்திய அணியின் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் காயத்தில் சிக்கினர்.

விஹாரி, பண்ட்

விஹாரி, பண்ட்

மறுபுறம் அஸ்வின், ஜடேஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்தனர். இவர்கள் யாரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. விராட் கோலி விடுப்பில் இருக்கிறார். ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரிக்கும் காயம் ஏற்பட்டது.

கேள்வி

கேள்வி

பண்ட் காயத்தை மீறி போட்டியில் பங்கேற்றுள்ளார். நான்காவது டெஸ்டில் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடரை முடித்த பின் காயத்தில் சிக்கி இருக்கும் வீரர்கள் எத்தனை பேரால் மீண்டும் போட்டிகளில் உடனடியாக பங்கேற்க முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறைந்த நேரம்

குறைந்த நேரம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிப்ரவரியில் துவங்க உள்ளது. இந்திய வீரர்கள் அதற்கு தயாராக மிகக் குறைந்த அளவிலான நேரமே உள்ளது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால் அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 15, 2021, 14:17 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
IND vs AUS : Indian team under trouble as England test series amid injury saga
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X