For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தவறான நேரத்தில் நடந்த ஐபிஎல்.. அதான் இப்படி நடக்குது.. சிக்கித் தவிக்கும் வீரர்கள்!

பிரிஸ்பேன் : இந்திய டெஸ்ட் அணி மோசமான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் பலர் காயத்தில் சிக்கி உள்ளனர்.

இது அனைத்திற்கும் ஐபிஎல் தான் காரணம் என விமர்சகர்கள் கூறத் துவங்கி உள்ளனர்.

2020 ஐபிஎல் தொடர் தவறான நேரத்தில் நடத்தப்பட்டதே வீரர்கள் மோசமாக காயத்தில் சிக்க முக்கிய காரணம் என கூறத் துவங்கி உள்ளனர்.

ஆஸி. தொடரை விடுங்க.. இனிமே தான் இருக்கு சிக்கல்.. செமயாக சிக்கிக் கொண்ட இந்திய அணி!ஆஸி. தொடரை விடுங்க.. இனிமே தான் இருக்கு சிக்கல்.. செமயாக சிக்கிக் கொண்ட இந்திய அணி!

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

2020 ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரை நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்பால் லாக்டவுனில் இருந்த வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் அந்த நீண்ட தொடரில் பங்கேற்றனர். அவர்கள் போதிய அளவு பயிற்சி செய்யாமல், உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ளாமல் அந்த தொடரில் பங்கேற்றனர்.

வரிசையாக சிக்கிய வீரர்கள்

வரிசையாக சிக்கிய வீரர்கள்

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஆடிய இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து காயத்தில் சிக்கினர். இதில் மோசமாக பாதிக்கப்பட்டது இந்திய அணி தான். ஐபிஎல் தொடருக்கு பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் ஏழு இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கினர்.

ஐபிஎல் தான் காரணம்

ஐபிஎல் தான் காரணம்

ஆஸ்திரேலிய அணி வீரர்களும் காயத்தால் பாதிக்கபட்டுள்ளனர். இதற்கு ஐபிஎல் தான் காரணம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நீண்ட ஐபிஎல் தொடரில் ஆடி விட்டு மீண்டும் ஓய்வின்றி வீரர்கள் கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஆடியது தான் காயங்களுக்கு காரணம் என கூறி வருகின்றனர்.

நிலைகுலைந்த இந்திய அணி

நிலைகுலைந்த இந்திய அணி

இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, நவ்தீப் சைனி என காயமடைந்த வீரர்களின் பட்டியல் மிகவும் நீளம். இந்திய அணி கிட்டத்தட்ட நிலைகுலைந்து போயுள்ளது.

Story first published: Friday, January 15, 2021, 16:31 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
IND vs AUS : IPL is the reason behind player’s injuries
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X