For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த 10 வருஷத்துக்கு இவரை அசைக்க முடியாது.. இளம் இந்திய வீரரை பாராட்டித் தள்ளிய மைக் ஹஸ்ஸி!

மெல்போர்ன் : இளம் இந்திய வீரர் ஷுப்மன் கில்லை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார் பேட்டிங் ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி.

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று அறிமுக போட்டியில் ஆடிய ஷுப்மன் கில் அதில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

அப்படி பேசினா என்ன அர்த்தம்? போட்டிக்கு இடையே கேள்வி கேட்ட வீரர்.. சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா! அப்படி பேசினா என்ன அர்த்தம்? போட்டிக்கு இடையே கேள்வி கேட்ட வீரர்.. சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!

அவரை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்திய அணியில் ஆடும் வீரர் என பாராட்டி இருக்கிறார் மைக் ஹஸ்ஸி.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக சரியாக செயல்படவில்லை. இந்த நிலையில், அவருக்கு பதில் ஷுப்மன் கில் இரண்டாம் போட்டியில் களமிறங்கி ஆடினார். அது அவருக்கு அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தல் ஆட்டம்

அசத்தல் ஆட்டம்

முதல் போட்டியில் அவர் அனுபவ வீரர் போல ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டார். எந்த சிரமமும் இன்றி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். முதல் இன்னிங்க்ஸில் 45, இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் குவித்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அவரது ஆட்டம் காரணமாக மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் சொதப்பிய போதும், இந்திய அணி சமாளித்து ரன் குவிக்க முடிந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றது.

ஹஸ்ஸி பாராட்டு

ஹஸ்ஸி பாராட்டு

ஷுப்மன் கில் ஆட்டத்தை பலரும் புகழ்ந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி அவர் இந்திய அணியில் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆடும் கிளாஸான வீரர் என பாராட்டித் தள்ளி இருக்கிறார். அவரை முதல் டெஸ்டில் ஆட வைத்து இருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

Story first published: Wednesday, December 30, 2020, 14:16 [IST]
Other articles published on Dec 30, 2020
English summary
IND vs AUS : Mike Hussey praises Shubman Gill after he played a matured innings in second test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X