For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு மேல சிறப்பா செய்ய முடியாது.. சீண்டிய பாண்டிங்.. பதிலடி கொடுத்த இந்திய வீரர்!

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன சிட்னி டெஸ்ட் போட்டியில் புஜாரா பேட்டிங் குறித்து புகார் எழுந்தது. இந்த நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசியதை சுட்டிக் காட்டி இருக்கிறார் புஜாரா.

மேலும், தான் இதை விட சிறப்பாக ஆடி இருக்க முடியாது என அவர் கூறி உள்ளார்.

இளப்பமா நினைச்சீங்களா... 3வது போட்டியில் அதிரடி காட்டிய ஸ்மித்.. சதம்... அரைசதம்! இளப்பமா நினைச்சீங்களா... 3வது போட்டியில் அதிரடி காட்டிய ஸ்மித்.. சதம்... அரைசதம்!

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் படு நிதான ஆட்டம் ஆடியது. ஆஸ்திரேலியா 338 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 94 ரன்கள் பின்தங்கி இருந்தது.

பாண்டிங்

பாண்டிங்

இதற்கு முக்கிய காரணம் புஜாரா மிகவும் நிதான ஆட்டம் ஆடியது தான். அவர் ரன் எடுக்காமல் தடுப்பாட்டம் ஆடியதால், மற்ற இந்திய வீரர்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி தங்கள் விக்கெட்களை இழந்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார்.

பதில்

பதில்

புஜாரா மீது ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் இதே போன்ற விமர்சனங்களை முன் வைத்த நிலையில் புஜாரா அதற்கு பதில் கூறி உள்ளார். தன் பலம், பலவீனத்தை கொண்டு தான் சிறப்பாக பேட்டிங் செய்ததாக அவர் கூறி உள்ளார்.

ஆட முடியாத பந்துகள்

ஆட முடியாத பந்துகள்

"நங்கள் எங்க சிறந்த ஆட்டத்தை ஆட முயற்சி செய்கிறோம். ஆனால், பாட் கம்மின்ஸ் வேறு திட்டங்களை வைத்துள்ளார். சில சமயம் அவர் ஆட முடியாத பந்துகளை வீசுகிறார். எனக்கு வந்த பந்தை எடுத்துக் கொண்டால், வேறு ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் அது இந்த தொடரின் சிறந்த பந்தாக மாறி இருக்கும்." என்றார் புஜாரா.

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

"நான் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் நான்கு முறை ஆட்டமிழந்து இருக்கிறேன். அதில் சில மிக நல்ல பந்துகள். நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இதை விட என்னால் சிறப்பாக செய்திருக்க முடியாது. பேட்ஸ்மேன் ஆக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் நான் பார்க்கிறேன்" என்றார் புஜாரா.

Story first published: Sunday, January 10, 2021, 14:05 [IST]
Other articles published on Jan 10, 2021
English summary
IND vs AUS : Pujara answers Ricky Ponting after he got critical of his slow batting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X