For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ரெக்கார்டு! உலகின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் இவர் தான்.. சச்சின் சாதனையை உடைத்த ஹிட்மேன்!

Recommended Video

Rohit Sharma beat Sachin, Hashim Amla records | சச்சின், ஆம்லா சாதனையை உடைத்த ஹிட்மேன்!

ராஜ்கோட் : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டி, அதில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா, அதை மிக விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார்.

ஹஷிம் அம்லா மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களின் சாதனைகளை முறியடித்துள்ளார் ரோஹித்.

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் போட்டி தோல்வி

முதல் போட்டி தோல்வி

இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகர் தவான் துவக்கம் அளித்தனர். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரில் தோல்வி அடைவதை தடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.

ரோஹித் சர்மா நிலை

ரோஹித் சர்மா நிலை

முதல் போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றிய ரோஹித் சர்மா, இரண்டாம் போட்டியில் பெரிய இன்னிங்க்ஸ் ஆட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

7,000 ரன்கள் எடுத்தார்

7,000 ரன்கள் எடுத்தார்

ரோஹித் சர்மா 44 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்களை கடந்த போது துவக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

மிக விரைவாக 7,000 ரன்களை கடந்த துவக்க வீரர் என்ற சாதனையையும் சேர்த்தே செய்துள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா, துவக்க வீரராக 137 இன்னிங்க்ஸில் 7,000 ரன்களை எட்டி இருக்கிறார்.

அம்லா, சச்சின் சாதனை

அம்லா, சச்சின் சாதனை

ஹஷிம் அம்லா 147 இன்னிங்க்ஸிலும், சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்க்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டி இருந்த நிலையில், அதை முறியடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.

சிறந்த துவக்க வீரர்

சிறந்த துவக்க வீரர்

தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் உலகின் சிறந்த துவக்க வீரர் ரோஹித் சர்மா தான் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மைல்கல் சாதனை தவறியது

மைல்கல் சாதனை தவறியது

எனினும், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா இன்னும் 4 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்து இருப்பார். எனினும், அது தவறியது.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்தப் போட்டியில் தவான் 96, கோலி 78 ரன்கள் அடித்து பெரிய அளவில் அடித்தளம் அமைத்தனர். பின்னர் ராகுல் அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோரை 300-ஐ தாண்டி எடுத்துச் சென்றார்.

Story first published: Friday, January 17, 2020, 17:45 [IST]
Other articles published on Jan 17, 2020
English summary
IND vs AUS : Rohit Sharma beat Sachin, Hashim Amla records in reaching 7000 runs milestone.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X