For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது வேற டீம்.. இது வேற டீம்.. ஆஸி. அணியின் 3 வீரர்கள்.. கோலிக்கு சச்சின் எச்சரிக்கை!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய அணி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த முறை ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்திய போது இருந்த அணியுடன் ஒப்பிட்டால், தற்போது மூன்று முக்கிய வீரர்கள் அணியில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

டெஸ்ட் வெற்றி

டெஸ்ட் வெற்றி

இந்திய அணி 2018-19ஆம் சீசனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் மண்ணிலேயே டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்து இருந்தது. இந்திய அணி பலமான அணியாக அப்போது இருந்தது. அதே சமயம், ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அப்போது இடம் பெறவில்லை.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

தற்போது நடக்க உள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சரி சமமான பலத்துடன் மோத உள்ளன. இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பங்கேற்றுள்ளனர். அதனால், அந்த அணியை இந்தியா குறைத்து மதிப்பிட முடியாது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆனால், வார்னர், ஸ்மித் மட்டுமின்றி கடந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்காத மற்றொரு வீரரும் அணியில் இருப்பதை சுட்டிக் காட்டி இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். கடந்த முறை இவர்கள் இல்லாததால் தான் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது என்பதையும் கூறினார்.

யார் அந்த வீரர்கள்?

யார் அந்த வீரர்கள்?

"கடந்த முறை இந்திய அணிக்கு எதிராக ஆடிய ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் மூன்று முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அணியில் வார்னர், ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இடம் பெற்றுள்ளனர்.

வெற்றிடம்

வெற்றிடம்

இது முந்தைய அணியை விட மிகவும் சிறந்த அணி. இரண்டு மூத்த வீரர்கள் அணியில் இல்லை என்றால் வெற்றிடம் உணரப்படும். அதைத் தான் ஆஸ்திரேலிய அணி அப்போது உணர்ந்தது என முந்தைய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பேசினார் சச்சின்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஸ்விங் செய்வது, விதவிதமாக பந்து வீசுவது, எதிர்பாராத முறையில் பந்து வீசுவது, ரிஸ்ட் ஸ்பின், பிங்கர் ஸ்பின் என அனைத்து வகையான பந்துவீச்சும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 13, 2020, 17:35 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
IND vs AUS : Sachin Tendulkar mentions 3 important players of Australia ahead of test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X