For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார் சொன்ன வார்னே.. ரசிகர்கள் கடும் கோபம்.. வெடித்த சர்ச்சை!

பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவை வீழ்த்த முடியாத விரக்தியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே நடராஜன் குறித்து சுற்றி வளைத்து ஸ்பாட் பிக்ஸிங் புகார் கூறி இருக்கிறார்.

ஹரி நிஷாந்த் முதல் எம் முகமது வரை.. கவனம் பெறும் இளம் தமிழக வீரர்கள்.. ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஹரி நிஷாந்த் முதல் எம் முகமது வரை.. கவனம் பெறும் இளம் தமிழக வீரர்கள்.. ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே!

இது இந்திய ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதன் காரணமாகவே இந்திய டி20 அணியிலும், பின் ஒருநாள் அணியிலும் ஆடினார். பொதுவாக ஐபிஎல் செயல்பாட்டை வைத்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள்.

பட்டியலில் நடராஜன்

பட்டியலில் நடராஜன்

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே புதிய வீரர்களை இந்தியாவில் இருந்து அணியில் எளிதாக சேர்க்க முடியாது என்பதால் ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட நடராஜனை டெஸ்ட் அணியில் மாற்று வீரர்கள் பட்டியலில் வைத்திருந்தது இந்திய அணி.

3 விக்கெட்

3 விக்கெட்

பல பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், வேறு வழியின்றி நடராஜனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிக முதல் தர போட்டி அனுபவம் இல்லாத நடராஜன், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சவாலாக ஏற்று சிறப்பாக பந்து வீசினார். முதல் இன்னிங்க்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதிக நோ பால்

அதிக நோ பால்

ஆனால், அவர் முதல் இன்னிங்க்ஸில் 6 நோ பால்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 2 நோ பால்களும் வீசினார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் எந்த பந்துவீச்சாளரும் இத்தனை நோ பால்கள் வீசுவது அரிது. ஆனால், அனுபவம் இல்லாத நிலையில் அவர் அதிக நோ பால்கள் வீசினார்.

வார்னே பிதற்றல்

வார்னே பிதற்றல்

இந்த நிலையில், அது பற்றி ஷேன் வார்னே சந்தேகமாக பேசினார். "நடராஜன் 7 நோ பால்கள் வீசினார். அது எல்லாமே பெரிய நோ-பால்கள். அதில் ஐந்து நோ பால்கள் ஓவரின் முதல் பந்தில் வீசப்பட்டது. அதுவும் மிகப் பெரிய நோ பால்கள். நாம் எல்லோருமே நோ பால் வீசி இருக்கிறோம். ஆனால், ஐந்து பந்துகள் ஓவரின் முதல் பந்தில் வீசுவது ஆச்சரியமாக உள்ளது" எனக் கூறி இருந்தார்.

ஸ்பாட் பிக்ஸிங் புகார்

ஸ்பாட் பிக்ஸிங் புகார்

ஷேன் வார்னே நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக நடராஜன் நோ பால் மூலம் ஸ்பாட் பிக்ஸிங் செய்து இருக்கலாம் என்பதையே சொல்ல வருகிறார் ஷேன் வார்னே. இந்த புகாரை அவராக சொல்வது போல தெரியவில்லை. ஆஸ்திரேலியா சார்பாக அவர் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கொதிப்பு

கொதிப்பு

நடராஜன் முதல் போட்டியில் பந்து வீசுகிறார் என்பதையும், அவர் அதிக முதல் தர போட்டிகளில் ஆடியதில்லை என்பதையும் மறந்து, வெற்றி பெற முடியாத விரக்தியில் வார்னே செய்த பிதற்றலை கண்டு ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.

விளாசல்

விளாசல்

அவர் சிங்கர் சீரிஸ் தொடரின் போது புக்கி ஒருவருக்கு தகவல் அளித்த புகாரில் சிக்கியதை சுட்டிக் காட்டி அவரை கடுமையாக விளாசி வருகின்றனர் ரசிகர்கள். இந்த விவகாரத்தை பிசிசிஐ கடுமையாக கண்டிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Story first published: Monday, January 18, 2021, 18:11 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
IND vs AUS : Shane Warne slammed for suspiscious about T Natarajan no-balls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X