என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தவறான ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த நிலையில், அவரது மோசமான ஷாட் தேர்வு பலராலும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கடைசி நிமிடம்.. அந்த கோல்.. கேரளாவுக்கு ஷாக் கொடுத்த ஈஸ்ட் பெங்கால்!

முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இது பொறுப்பற்ற ஷாட் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 369 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது.

சிக்ஸ் அடிக்க ஆசை

சிக்ஸ் அடிக்க ஆசை

இந்திய அணியின் துவக்க விரர் ஷுப்மன் கில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் புஜாரா - ரோஹித் சர்மா ஆடி வந்தனர். அப்போது போட்டி இந்தியா வசமே இருந்தது. 44 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா நாதன் லியோன் பதில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ஏறி வந்து அடித்தார்.

அவுட்

அவுட்

அந்த தேவையற்ற ஷாட் காரணமாக ரோஹித் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 44 ரன்களில் அவரது விக்கெட் பறிபோனது. அப்போது ஆஸ்திரேலியாவின் சேனல் 7-இல் வர்ணனை செய்து வந்த சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவை விளாசித் தள்ளினார்.

மன்னிப்பே இல்லை

மன்னிப்பே இல்லை

"ஏன்?, ஏன்?, ஏன், இது நம்ப முடியாத ஷாட். பொறுப்பற்ற ஷாட். லாங் ஆஃப்-பில் ஒரு வீரர் இருக்கிறார். டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு வீரர் இருக்கிறார். இரண்டு பந்துகளுக்கு முன்பு தான் ஒரு பவுண்டரி அடித்தீர்கள். அப்புறம் ஏன் இந்த ஷாட்டை ஆடினீர்கள்? நீங்கள் ஒரு மூத்த வீரர். இதற்கு மன்னிப்பே இல்லை." என பொங்கி எழுந்தார் கவாஸ்கர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs AUS : Sunil Gavaskar lashes out Rohit Sharma for throwing his wicket
Story first published: Saturday, January 16, 2021, 13:53 [IST]
Other articles published on Jan 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X