For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை.. கனவு நனவான அந்த தருணம்.. வியக்க வைத்த நடராஜன்!

பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

100 கோடி இந்தியர்கள் இருக்கும் இந்த நாட்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதே பலருக்கும் பெரிய கனவாக உள்ளது.

அதிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் அறிமுகம் ஆவது என்பதெல்லாம் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பை தான் தங்கராசு நடராஜன் பெற்றுள்ளார்.

கூடுதல் வீரர்

கூடுதல் வீரர்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது வலைப் பயிற்சியில் பந்து வீசும் கூடுதல் வீரராக தேர்வு செய்யப்பட்டார் நடராஜன். அதுவும் 2020 ஐபிஎல் தொடரில் அவர் வீசிய யார்க்கர்களால் அவருக்கு கிடைத்த இடம் தான். அதற்கு முந்தைய அவரது செயல்பாடுகள் எதுவும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

டி20 அணியில் இடம்

டி20 அணியில் இடம்

அதன் பின் தொடருக்கு வீரர்கள் கிளம்பும் முன்பே காயமடைந்த வருண் சக்கரவர்த்திக்கு பதில் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அப்போதும் அவர் போட்டிகளில் ஆடுவது உறுதியாகவில்லை. இதற்கிடையே ஒருநாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டார்.

அறிமுகம்

அறிமுகம்

ஒருநாள் அணி, டி20 அணி என வரிசையாக இரண்டு வித போட்டிகளில் அறிமுகம் ஆனார். அடுத்ததாக டெஸ்ட் தொடருக்கான அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு உத்தேச வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அடுத்ததாக பல வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் காயமடைந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகம் ஆனார்.

முதல் இந்திய வீரர்

முதல் இந்திய வீரர்

ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் நடராஜன் தான். அந்த அரிய சாதனையை அவர் செய்துள்ளார். அது மட்டுமின்றி தான் அறிமுகம் ஆன போட்டிகளில் எல்லாம் குறைந்தது 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார்.

Story first published: Friday, January 15, 2021, 19:03 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
IND vs AUS : T Natarajan debuts in all three teams in same series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X