For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus Test : ஜடேஜா, குல்தீப்புக்கு பதில் அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தீங்க?

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

மற்ற இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் ஜடேஜா அணியில் இடம் பிடிக்கவில்லை.

அஸ்வின் கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் பெரியளவில் விக்கெட்கள் வீழ்த்தவில்லை. இந்த நிலையில், அவரை அணியில் சேர்த்ததை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

அஸ்வின் அணியில் உண்டு

அஸ்வின் அணியில் உண்டு

முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள 12 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் பெயர் மட்டுமே இடம் பெற்று இருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ் இருவரும் அணியில் இல்லை. 12 வீரர்களில் ரோஹித் அல்லது ஹனுமா விஹாரி, இருவரில் ஒருவர் மட்டுமே வாய்ப்பு பெறுவார் என்ற நிலை இருந்தது. அஸ்வின் நிச்சயம் முதல் டெஸ்டில் ஆடுவார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

டி20 தொடரில் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார். எனினும், முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் குல்தீப் இடம் பெற முடியவில்லை. குல்தீப்பின் சுழற் பந்துவீச்சு முறை பல வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.

குல்தீப்பின் அனுபவமின்மை

குல்தீப்பின் அனுபவமின்மை

அதே சமயம், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் குல்தீப் ஆடினார். அந்த போட்டியில் குல்தீப்பால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அந்த போட்டியில் குல்தீப்பின் அனுபவமின்மை தெரிந்தது. ஆஸ்திரேலிய தொடரில் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே ஆட உள்ள நிலையில், குல்தீப் ஒரு வேளை தடுமாறினால் அணிக்கு சிரமமாகி விடும் என்ற காரணத்தால் அவருக்கு முதல் டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. எனினும், கவாஸ்கர் போன்ற சிலர் குல்தீப்பை களமிறக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜா நிலை

ரவீந்திர ஜடேஜா நிலை

குல்தீப் அனுபவமற்ற வீரர் என எடுத்துக் கொண்டால் ஜடேஜாவை என்ன சொல்வது? நல்ல டெஸ்ட் அனுபவம் கொண்ட ஜடேஜா சுழற் பந்துவீச்சோடு, பேட்டிங்கிலும் கை கொடுக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா 7 விக்கெட்கள் வீழ்த்தி, 86 ரன்களும் அடித்து அசத்தினார்.

தெறிக்க விட்ட ஜடேஜா

தெறிக்க விட்ட ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தன் முதல் டெஸ்ட் சதத்தை அடித்து தெறிக்க விட்டார் ஜடேஜா. அதே போல, கடைசியாக சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடிய ஜடேஜா ஆட்டமிழக்காமல் 178 மற்றும் 48 ரன்கள் அடித்தார். பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார் அவர். இருந்தும் அணியில் முதல் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

அஸ்வினுக்கு வாய்ப்பா? ஆப்பா?

அஸ்வினுக்கு வாய்ப்பா? ஆப்பா?

அஸ்வின் தனக்கு அணியில் வாய்ப்பு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் அஸ்வின் சொதப்பினால் அடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகி விடும். அடுத்து ஜடேஜா மற்றும் குல்தீப் அவரது இடத்தை எடுத்துக் கொள்வார்கள்.

Story first published: Wednesday, December 5, 2018, 17:35 [IST]
Other articles published on Dec 5, 2018
English summary
Ind vs Aus Test : While Ashwin got selected for the first test against australia, Ravindra Jadeja and Kuldeep Yadav were dropped.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X