For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பயரை எதிர்த்து பேசிய ஆஸி. கேப்டன்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி!

சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் அம்பயர் முடிவை எதிர்த்து பேசி சண்டையிட்டார்.

இதை அடுத்து அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 இதுக்கும் மேல் கஷ்டப்படுத்த வேண்டாம்.. ஆஸி.க்களை வைத்து செய்த அஸ்வின் - விஹாரி.. தரமான சம்பவம்! இதுக்கும் மேல் கஷ்டப்படுத்த வேண்டாம்.. ஆஸி.க்களை வைத்து செய்த அஸ்வின் - விஹாரி.. தரமான சம்பவம்!

புஜாரா கேட்ச் கொடுத்ததாக எண்ணி ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்ட போது தான் அந்த சம்பவம் நடைபெற்றது.

புஜாரா கேட்ச்

புஜாரா கேட்ச்

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது புஜாரா கேட்ச் கொடுத்ததாக ஆஸ்திரேலியா எண்ணியது. விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய அணி கேப்டனுமான டிம் பெயின் அவுட் கேட்டார். அம்பயர் மறுக்கவே ரிவ்யூ கேட்கப்பட்டது.

கோபம்

கோபம்

மூன்றாவது அம்பயர் பந்து பேட்டில் பட்டதை உறுதி செய்யப்படாததால் கள அம்பயரின் முடிவுக்கே விட்டுவிட்டார். ஏற்கனவே, கள அம்பயர் அவுட் இல்லை என தீர்ப்பளித்ததால் புஜாரா தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்த முடிவை கண்டு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் கோபம் அடைந்தார்.

அம்பயருடன் மோதல்

அம்பயருடன் மோதல்

கள அம்பயர் வில்சனிடம் அவர் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். பந்து பேட்டில் பட்டதாக அவர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அம்பயர் இந்த முடிவை மூன்றாவது அம்பயர் தான் எடுத்தார். என்னிடம் பேச வேண்டாம் என காட்டமாக கூறினார்.

தண்டனை

தண்டனை

இந்த சம்பவத்தை அடுத்து அம்பயரின் முடிவை எதிர்த்து பேசியதற்காக டிம் பெயின் மீது விதிப்படி நடவடிக்கை எடுத்தது. அவருக்கு 15 சதவீதம் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.

Story first published: Monday, January 11, 2021, 12:35 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
IND vs AUS : Tim Paine fined for his dissent to umpire’s decision
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X