For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிஞ்சா ஜெயிச்சுக் காட்டுங்க.. இப்படி ஒரு மேட்டரா? மேட்ச் துவங்கும் முன்பே செக் வைத்த கோலி!

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தான் வெற்றி என போட்டி துவங்கும் முன்பே ஒரு விஷயம் வைரலாக பரவியது.

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றால் இந்தியாவுக்கு தோல்வியே இல்லை என்பது தான் அந்த விஷயம்.

நடாஷா இருக்க நாய்க்குட்டியை கொஞ்சிய ஹர்திக் பாண்டியா... குடும்ப போட்டோ வெளியீடு நடாஷா இருக்க நாய்க்குட்டியை கொஞ்சிய ஹர்திக் பாண்டியா... குடும்ப போட்டோ வெளியீடு

அது குறித்த புள்ளிவிவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதோடு, கடந்த முறை டெஸ்ட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது.

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது முதலே இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பொங்கியது. அதற்கு காரணம், கோலி டாஸ் வென்றது தான்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

இதற்கு முன் 25 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி டாஸ் வெற்றி பெற்றுள்ளார். அதில் 21 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகளில் டிரா செய்துள்ளது இந்திய அணி. ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அதனால், முக்கியமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய அணிக்கும் சாதகமான விஷயம் ஒன்று உள்ளது. அந்த அணி இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததே இல்லை.

டிரா ஆனால்..

டிரா ஆனால்..

இந்த நிலையில், இந்தப் போட்டியின் முடிவில் இரண்டில் ஒரு அணி தங்களின் அதிர்ஷ்டத்தை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஒருவேளை போட்டி டிரா ஆனால் இரண்டு அணிகளும் தங்கள் அதிர்ஷ்டத்தை தொடரலாம்.

Story first published: Thursday, December 17, 2020, 19:38 [IST]
Other articles published on Dec 17, 2020
English summary
IND vs AUS : Virat Kohli won toss and fans feel India will win the match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X