For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி டிரா செய்தது.

அது போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அஸ்வின் - ஹனுமா விஹாரி காயங்களுடன் ஆஸ்திரேலிய அணியை கதற வைத்தனர்.

அப்போது இளம் வீரர் ஷர்துல் தாக்குரிடம் ஒரு செய்தியை கூறி அஸ்வின், விஹாரியிடம் கூறுமாறு தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. ஆனால், அவர் அதை கூறவில்லை.

இந்தியா நிலை

இந்தியா நிலை

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்களை இழந்த நிலையில் அஸ்வின் - ஹனுமா விஹாரி களத்தில் இருந்தனர். 42 ஓவர்கள் மீதமிருந்தது. இவர்கள் இருவரின் விக்கெட்டை வீழ்த்தினால், அடுத்து ஆஸ்திரேலியா எளிதாக மற்ற விக்கெட்களை வீழ்த்தலாம் என்ற நிலை இருந்தது.

வலி

வலி

ஹனுமா விஹாரி காலில் தசைப்பிடிப்புடன் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினார். மறுபுறம் அஸ்வின் முதுகில் ஏற்பட்ட கடும் வலியுடன் பவுன்சர் பந்துகளை உடலில் வாங்கி வலியில் துடித்துக் கொண்டு இருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அவர்களை வீழ்த்த முடியவில்லை.

இதை சொல்லிடு

இதை சொல்லிடு

இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஷர்துல் தாக்குரிடம், அஸ்வின், நாதன் லியோன் ஓவர்களையும், ஹனுமா விஹாரி வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களையும் சந்தித்தால் எளிதாக இருக்கும் என அவர்களிடம் கூறி விடு என தெரிவித்துள்ளார்.

சொல்ல மாட்டேன்

சொல்ல மாட்டேன்

அந்த செய்தியை தெரிவிக்க உள்ளே சென்ற தாக்குர், பதற்றத்துடன் இருந்துள்ளார். அஸ்வின் என்ன செய்தி? என கேட்டுள்ளார். அப்போது தாக்குர் பல விஷயங்களை என்னிடம் கூறுமாறு சொன்னார்கள். ஆனால், நான் எதையும் சொல்லப் போவதில்லை என கூறி இருக்கிறார்.

பேச்சை கேட்கவில்லை

பேச்சை கேட்கவில்லை

தொடர் முடிந்த நிலையில், அஸ்வின் அந்த விஷயத்தோ தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சையே கேட்காத வீரர் என ஷர்துல் தாக்குர் பெயர் எடுத்து இருக்கிறார். ஆனாலும், அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 23, 2021, 14:56 [IST]
Other articles published on Jan 23, 2021
English summary
IND vs AUS : When Shardul Thakur denied to pass Ravi Shastri’s message
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X