For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா இந்த பையன்? ரோஹித், தவான் 2 பேரும் அவுட்.. 19 வயது இளம்புயலுக்கு குவிந்த பாராட்டு!

டெல்லி : பயிற்சியின் போது ரோஹித் சர்மா, ஷிகர் தவான் என இருவரையும் அவுட் ஆக்கி ஆச்சரியம் அளித்துள்ளார் இளம் பந்துவீச்சாளர் ஒருவர்.

அவர் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டி இருக்கிறார். மேலும், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் ஒருவர், அவரை குறித்து விசாரித்து பாராட்டி இருக்கிறார்.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயிற்சியில் பந்து வீச வந்து இந்திய அணி நிர்வாகத்தை ஈர்த்துள்ளார் அந்த இளம் வேகப் பந்துவீச்சாளர்.

இந்தியா - வங்கதேசம் தொடர்

இந்தியா - வங்கதேசம் தொடர்

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் நவம்பர் 3 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. அதற்காக இரு அணிகளும் டெல்லியில் முகாமிட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணியில் விராட் கோலி இல்லாத நிலையில், மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ரோஹித் - தவான் பயிற்சி

ரோஹித் - தவான் பயிற்சி

இந்த தொடருக்கான கேப்டன் ரோஹித் சர்மா, துவக்க வீரர் ஷிகர் தவான் ஆகிய இருவர் மட்டுமே பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள். அவர்கள் இருவரும் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்து வந்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த கிளப் கிரிக்கெட் வேகப் பந்துவீச்சாளர் கேஷவ் தபாஸ் அவர்களுக்கு பந்து வீசினார்.

ரோஹித் அவுட்

ரோஹித் அவுட்

முதலில் ரோஹித் சர்மாவுக்கு அவர் பந்து வீசிய போது, ஒரு பந்து எட்ஜ் ஆனது. ரோஹித் அந்த பந்தை சரியாக கணிக்கததால் பந்து எட்ஜ் ஆனது. நிச்சயம் இது விக்கெட் கீப்பர் பிடிக்கக் கூடிய எளிதான கேட்ச் தான்.

தவான் அவுட்

தவான் அவுட்

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் ஷிகர் தவான், கேஷவ் பந்தில் அடித்து ஆட முயன்று பவுல்டு அவுட் ஆனார். இந்திய அணியின் இரண்டு அனுபவம் வாய்ந்த துவக்க வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்து வியப்பை ஏற்படுத்தினார் கேஷவ்.

ரோஹித் செய்த காரியம்

ரோஹித் செய்த காரியம்

ரோஹித் சர்மா பொதுவாக வலை பயிற்சியில் பந்தை எடுத்து பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்க மாட்டார். ஆனால், கேஷவ் அவரை அவுட் ஆக்கிய பின், பந்தை தானே எடுத்து கேஷவ்விடம் கொடுத்தார். அதுவே ரோஹித்தின் பாராட்டாக பார்க்கப்படுகிறது.

ரவி சாஸ்திரி பாராட்டு

ரவி சாஸ்திரி பாராட்டு

அதே போல, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "நல்ல பந்துவீச்சு" என கேஷவ் அவர்களை அவுட் ஆக்கிய போது தன் அருகில் இருந்தவர்களிடம் கூறி இருக்கிறார். ரவி சாஸ்திரியின் பாராட்டு, பிற்காலத்தில் இந்திய அணியில் கேஷவ் நுழைய வாய்ப்பாகவும் அமையலாம்.

ஷர்துல் தாக்குர்

ஷர்துல் தாக்குர்

இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு பெற்று வரும் வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர், கேஷவ்விடம் நேரடியாக பேசி பாராட்டி இருக்கிறார். அவர் எந்த கிளப் அணிக்காக ஆடுகிறார் என்பது குறித்தெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

யார் இந்த கேஷவ்?

யார் இந்த கேஷவ்?

19 வயதே ஆன கேஷவ் தாபாஸ் டெல்லியை சேர்ந்த சுரிந்தர் கண்ணா கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து, விளையாடி வருகிறார். டெல்லி அண்டர் 19 அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடி இருக்கிறார்.

குடும்ப நிலை

குடும்ப நிலை

அவரது தந்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் நலக் குறைவால் இறந்து விட்டார். அதனால் குடும்பம் நிதி பற்றாக்குறையால் சிரமப்பட்டாலும், சகோதரர் மற்றும் சகோதரியின் வருமானத்தில் குடும்பம் நடந்து வருகிறது. தன் சார்பாக கிரிக்கெட்டில் சாதித்து குடும்பத்திற்கு உதவ வேண்டும் என உழைத்து வருகிறார் கேஷவ்.

முதல் வாய்ப்பு

முதல் வாய்ப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசினார் கேஷவ். எனினும், இந்திய அணிக்கு பந்து வீசவில்லை என்ற குறை இருந்தது. அது இப்போது தீர்ந்துள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்பில் தன் முத்திரையை பதித்துள்ளார் கேஷவ்.

Photos : Keshav Dabas/Facebook

Story first published: Saturday, November 2, 2019, 14:26 [IST]
Other articles published on Nov 2, 2019
English summary
IND vs BAN : Keshav Dhabas, a 19 year old boy took the wickets of Rohit sharma and Dhawan in net practice.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X